Wednesday, June 3, 2009

இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த மைக்ரோ பிராசசர்கள்........

intel_chipகம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம்.

1971: முதன் முதலில் கால்குலேட்டர்களுக்கான 400ஓஏத் சிப்பினை இன்டெல் வழங்கியது. இதுதான் உலகின் முதல் மைக்ரோ பிராசசராக இருந்தது. சிப் அளவில் கம்ப்யூட்டர் ஒன்றின் செயல்பாடுகளை இது வழங்கியது.

1974: Blistering 5MHz என்ற சிப் தான் முதன் முதலில் ஐ.பி.எம். மற்றும் அதனைப் போன்ற கம்ப்யூட்டர்களுக்கென வடிவமைக் கப்பட்ட சிப் ஆகும். இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான் இன்டெல் நிறுவனத்தை முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

1982: இன்றைய கம்ப்யூட்டர்களின் முதல் வகை சிப்பாக 286 வழங்கப்பட்டது. இதிலிருந்துதான் பிராசசர் குடும்பம் தோன்றியது. முன்னாளில் எழுதிய சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பைல்களையும் ஏற்றுக் கொள்ளும் பிராசசராக இது இயங்கியது.

1985: இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ட்ரான் சிஸ்டர்களுடன் வடிவமைக்கப்பட்ட முதல் சிப். இதனை 386 எனப் பெயரிட்டு அழைத்தனர்.

1989: முதன் முதலாக மேத்ஸ் பங்சன்களுடன் அமைக்கப்பட்ட சிப் 486. குழப்பமான மேத்ஸ் செயல்பாடுகளை சென்ட்ரல் பிராசசரிடம் இருந்து பெற்று இயங்கும் சிப்பாக இது அமைந்தது.

1994: முதல் பென்டியம் சிப் கிடைத்து. இது 100 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது. பேச்சு, ஒலி, கை எழுத்து, போட்டோ இமேஜஸ் ஆகிய அனைத்தையும் எளிதாக ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் சிப்பாக இது உருவானது.

1995: ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர்களுக்கும் 32 பிட் சர்வர்களுக்கும் என பென்டியம் புரோ சிப் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சிப்பிலும் வேகத்தை அதிகப்படுத்த இரண்டாவதான கேஷ் மெமரிசிப்பினைக் கொண்டிருந்தது. இதில் 55 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன.

1996: 75 லட்சம் ட்ரான்சிஸ்டர்களுடன் எம்.எம்.எக்ஸ் தொழில் நுட்பத்துடன் பென்டியம் ஐஐ ஸியான் சிப் வெளியானது. வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் வகைகளைக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இதிலும் கேஷ் மெமரி சிப் உள்ளடங்கி இருந்தது.

1999: பென்டியம் ஐஐஐ வெளியானது.வேகம் 500 மெகா ஹெர்ட்ஸ். இதன் மூலம் இன்டர்நெட் உலாவில் புதிய அனுபவம் கிடைத்தது. 95 லட்சம் ட்ரான்சிஸ்டர்கள் இதில் பொருத்தப்பட்டன.

2000: குறைந்த மின் செலவில் மொபைல் இன்டெல் செலிரான் சிப் தரப்பட்டது. இந்த செலிரான் சிப் குறைந்த விலையில் வெளியிடப்பட்டதால் கம்ப்யூட்டரின் மொத்த விலையும் குறைந்தது.

2001: பென்டியம் 4 சிப் வெளியானது. இதன் வேகம் அப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது.1.5 பில்லியன் ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.

2002: ஹைபர் த்ரெடிங் தொழில் நுட்பத்துடன் சிப் வெளியானது. ஒரே சிப்பில் இரண்டு ப்ராசசர்கள் இயங்கின.

2004: லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கத் தேவையான சென்ட்ரினோ சிப் வெளியானது. எங்கும் எடுத்துச் செல்ல இந்த சிப் பெரிய அளவில் வடிவமைக்க ப்பட்டிருந்தது.

2005: பென்டியம் 4 எக்ஸ்ட்ரீம் எடிஷன் வெளியானது.இதன் அதிவேக இயக்கம் கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடுவோருக்கு அமுதமாக அமைந்தது.

2006: தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் டூயோ சிப் வெளியானது. இயங்கும் வேகம் மற்றும் திறமையான டிசைன் இந்த சிப்பினை உலக அளவில் பார்க்க வைத்தது.

2007: கோர் 2 குவாட் க்யூ 6600 (Core 2 Quad Q6600) என்ற சிப் வெளியானது. இன்றைய தொழில் நுட்பத்தின் சிறந்த வெளிப்பாடாக இது அமைந்தது.

2008: Atom Z540 என்ற பெயரில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த உதவிடும் வேகமான இயக்க சிப் இது. பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டது.

2009: The Core i7 desktop processor என்ற பெயரில் ,வேகம் மற்றும் திறமையான டிசைன், பல புதிய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திறமையான டிசைன்.

பாலிவுட் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள்..........

1.அமீர் கான்

aamir

2.ஐஸ்வர்யாராய்

aishwarya

3.ஷாருக் கான்

shahrukh

4.சஞ்சய் தத்

sanjay

5.அக்சய் குமார்

akshay

6.கரீனா கபூர்

kareena

7.கஜோல்

kajol

8.கரிஷ்மா

karishma

9.ராணி முகர்ஜி

rani

10.அபிஷேக் பச்சன்

abhishek

11.ஹிரித்திக் ரோஷன்

hrithik

காதல் கணிப்புக்களா??? உண்மையா?

நாம என்ன தான் பகுத்தறிவு வாதியாக இருக்க விரும்பினாலும் சில விடயங்களில் பகுத்தறிவை நான் கழற்றி வைப்பதுண்டு.
என்னைப் பற்றி சோதிடர் ஒருவர் அக்குவேறு ஆணிவேறாக தகவல்களை தெரிவித்ததால் சோதிடத்தின் மீது ஒரு சிறிய பற்று.
நம்ம காதல் நிலைமை (ஏதாவது கிடைக்குமா எண்டு தான்) எல்லாம் எப்படி இருக்கு எண்டு தேடிற்று இருந்த போதுதான் எனக்கு ஒரு வலைப்பக்க முகவரி கிடைத்தது. அற்புதமான வலைத்தளம்.
சில விடயங்களில் நம்மை மீறிய சக்திகளும் இருக்கின்றன என்பதற்கு அற்புதமான உதாரணம் தான் இந்த வலைத்தளம்.
நீங்களும் ஒருமுறை போய்ப் பாருங்களேன்...
 

Monday, June 1, 2009

காதல் பற்றிய பொன்மொழிகளை இங்கு தொகுத்து உள்ளேன்.........


விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.

-பெய்லி
-------------
காதலிக்காமலே இருப்பதை விட,
காதலித்து தோல்வி காண்பதே மேல்.

-டென்னிசன்
-----------
சூரியன் மறையலாம்;
ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.

-ஊட்
-----------
உண்மை காதல் அனைத்துக்கும்
பரஸ்பர மதிப்பே அடிப்படை.

-ஜார்ஜ்
-----------
காதலே, காதலின் வெகுமதி.

-ஜான் டிரைடன்.
-----------
காதல் - தன்னைத் தானே அளிப்பது;
விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.

-லாங்பெல்லோ.
----------
காதல் பேச முற்பட்டு விட்டால்,
ஊமை கூட புரிந்து கொள்வான்.

-ஸ்லிப்ட்
-------
உண்மையான காதல்,
எண்ணத்திலே மலர்ந்து
உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.

-கர்னிலியஸ் நீல்.
------------
உலகை வலம் வரவும்,
சுற்றி வரவும் செய்வது காதல்.

-மார்லோ
-----------
ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்;
பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

-பைரன்
--------------
காதல் ஒரு கண்ணாடி குவளை;
இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்;
மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

-ஜெரோம்.
-------------
உண்மையான காதல்
ஒரு தணியாத வேட்கை,
இனிமையான தொடர்கதை,
அணையா தீ.

- ஆபின்டன்
----------
காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல.
அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது;
எப்பொழுதுமே வாடாத மலர் அது.

-லோவில்
--------------
யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை
நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.

-கதே.
-----------
அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.

-சார்லஸ் டிப்டின்.
------------
தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.

-கேபிள்
---------
போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.

-ஹெர்பர்ட்.

காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.

- ஜார்ஜ் ஹெர்பர்ட்
----------------
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

- காத்தரின் ஹெப்பர்ன்
---------------------
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

- பிரயன் வாங்
-------------
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

- டி.ஹெச். லாரன்ஸ்
------------------
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்
---------------
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

- ஜூல் ரெனா
-----------------------
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.
- டக்ளஸ் யேட்ஸ்
--------------------
காதல் காலத்தை மறக்கச் செய்யும்.
காலம் காதலை மறக்கச் செய்யும்.

- யாரோ
---------------------
கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

- யாரோ
-------------
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.

-யாரோ
--------------------------


காதல் பற்றிய பொன்மொழிகளை இங்கு தொகுத்து உள்ளேன்.


எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லப்பா....:Inlove::Inlove::Inlove:

உண்மையான காதல் என்பது............


"காதல் என்பது ஒருவரின் இளமைகாலத்தில் வரக்கூடிய இனிமையான அனுபவம்" என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ "கல்யாணத்தின் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்புதான் உண்மையான காதல், அதுவும் கருத்தொருமித்த குடும்ப வாழ்வில் இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதுமை நிலையில் இருக்க கூடிய காதலே உண்மையான, முழுமையான காதல்" என்கிறார்கள்.

"காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம்" என்கிறார்கள் சிலர். "அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள்" என்கிறார்கள் வேறு சிலர்.

"கண்ணில்லாத காதலால் குடும்பம், சமூகத்தில் பிரச்சனைகளே உருவாகும், அந்த காதல் உணர்ச்சிபூர்வமாய் இருக்காமல், அறிவு பூர்வமாய் சிந்திக்கப்பட்டு வந்தால் அது குடும்பம், சமூகத்திற்கு நன்மை தரும்" என்பது ஒரு சாராரின் வாதம். "அப்படியா, அறிவுபூர்வமாய் இருப்பது காதலே அல்ல, அது வெறும் கடமை மட்டுமே" என்பது எதிர் தரப்பினரின் வாதம். "கண்ணில்லாது ஏற்படும் காதல் என்பது வாழ்வில் பலருக்கு துன்பத்தில் முடிகிறது. அமரத்துவம் பெற்றதாய் பேசப்படும் காதல்கள் எல்லாம் துன்பத்தில் முடிந்தவையே. அப்படி இருக்கையில், வெறும் உணர்ச்சியினால் ஏற்பட்ட அப்படிப்பட்ட காதலால், தனி மனிதனுக்கோ, அல்லது சமுதாயத்துக்கோ என்ன பலன்" என்று மற்றவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, "காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது" என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் ஒரு புறமுமாய் வாதிட்டு கொள்கிறார்கள்.

இப்படி பல முரண்பாடுகளுடன் பேசப்படும் காதல்பற்றி நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்களை முடிந்தால் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்களேன்.

கோவை ரமேஷ் விபத்தில் பலி......


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மூலம் அறிமுகமாகி, சன் டிவியின் அசத்தப் போவது யாரு மூலம் பிரபலமான கோவையைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் கோவை ரமேஷ் சாலை விபத்தில் பலியானார்.

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (40). கோவை ரமேஷ் என்ற பெயரில் சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். முன்பு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் இவர்.

பெரும்பாலும் பெண் வேடத்தில்தான் இவர் வருவார். பல்வேறு பிரபல நடிகைகளின் குரலில் பேசுவது இவரது திறமை. குறிப்பாக சரோஜாதேவியைப் போலவே சிறப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தவர் ரமேஷ்.

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

கோவை ரமேஷ் தனக்குக் கிடைத்த புகழின் மூலம் பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், அவரும், மோகன் குமாரும், திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர்.

நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கேயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீஸார் மீட்டனர்.

லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேதைகள் வெளிப்படுத்திய கருத்துக்கள்

நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டுங்கள். ஆனால் தேர்ந்தெடுத்த நண்பனை மாற்றும் முன்பு இன்னும் அதிகம் நிதானம் காட்டுங்கள்.
-பெஞ்சமின் பிராங்ளின்.

மனிதனை விட சூழ்நிலை வலிமை மிக்கது.
-நேரு.

நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனுக்கு நண்பனும் போய்விடுவான், கடனுக்கு கடனும் போய்விடும்.
-ஷேக்ஷ்பியர்.

உன் வெற்றிகளை எண்ணிப் பார்க்காதே...
தோல்விகளை மட்டும் எண்ணிக் கொள்...
ஏனென்றால் உன் வெற்றிகளை விட உன் தோல்விகள் பெறுமதி வாய்ந்தவை.
-ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.