Tuesday, August 25, 2009

சுடராகும் என் காதல் ஜோதி

இருபது  வயதிலே இனிமையான அனுபவமாய்
  என்னுள் நுழைந்தது இனிமையான ஒரு காதல்.
தாய் அன்பை மறக்கவைத்து தங்கை அன்பை இழக்கவைத்து
  இனியவளே உன் அன்பை பெறவந்தேன்.
வஞ்சகம் நிறைந்த நட்பு என்னுடனே பின்வந்து-என்அன்பை
  உன் தாய் காதினிலே தீ இட்டது.
காதலுக்கு எதிரிகள் பலவுண்டு இவ்வுலகில்-ஆனால்
 காதலரே எதிரியான கதையானது நம் காதல்.
 
 காலன் அவன் கைதனிலே அகப்பட்ட  உயிர் போல
      ஜீவன் இழந்தது என் காதல்  
எத்தனை உறவுகள்  தரணியிலே வந்தாலும் - உடன்
 வந்த சொந்தம்தான் இறுதிவரை கூட வரும்
உண்மையான காதலுக்கு வலிகளும் இன்பமாகும்
 பிரிவுகள் காதலையே வலிமையாக்கும்
சுடச்சுட உறுதியாகும் செங்கல் போல்
 துயர்வர வர உறுதியாகும் நம் காதல்
தூயவள் அன்பினை முழுமையாக நான் பெறவே
 சுடராகும் என் காதல் ஜோதி

என்வழி வந்து என்விழிநீர் துடைத்த என் காதலுக்கு சமர்ப்பணம்.

மெல்ல கசிந்த எந்திரன் ரகசியம்...

எவ்வளவு விஞ்ஞானம் முன்னேறினாலும் தடுக்க முடியாது இதை...

சம உரிமை போதுமா....

பாரதி காண இன்றைய பெண்கள்...

வாழ்வின் மகத்தான உண்மைகள்.....

அன்னை என்ற முச் சொல் தந்தது
வாழ்கை என்ற இன் சொல்
வாழ்கை என்ற நாச் சொல் தந்தது
காதல் என்ற முச் சொல்
காதல் என்ற முச் சொல் தந்தது
பொறுப்பு என்ற நாச் சொல்
பொறுப்பு என்ற நாச் சொல் தந்தது
போராட்டம் என்ற கடும் சொல்
போராட்டம் என்ற கடும் சொல் தந்தது
இன்பம் என்ற நாச் சொல்

Monday, August 24, 2009

படிப்பு தான் உயிர் என்று...





படிப்பு தான் உயிர் என்று இருந்தவனை
கண் பார்த்து காதல் பள்ளியில் சேர்தவளே..

உண்மையில் காதல் பள்ளியில் நீ ஒரு வல்லுனன்
என் உணர்வுகளில் உயிராய் இருந்து என்
நினைவு முழுக்க நிறைந்தவளே…….

மாற்றுவதற்கும், மறப்பதற்கும் காதல் என்ன
சிறு குழந்தையின் தவறா என்ன Huh
உன் பெயரை பதிவு செய்த இடத்தில் அழித்து இன்னொரு
பெயரை பதிவு செய்ய இதயம் ஒன்றும் கரும்பலகை அல்ல..

உதிரத்தில் கலந்து உயிரில் நிறைந்து உணர்வில் ஒன்றானது
காதலென்று தெரியதவளே !!!

பாலில் நீர் கலந்தால் கூட பிரித்து விடலாம்
என் உதிரத்தில் உயிராக கலந்தவளே
நான் எப்படி உன்னை பிரிக்க..

வார்த்தை கூட வேண்டாம் உன் பார்வை
மட்டும் போதும் என்று என் கண் கட்டி
காதல் பாடம் நடத்தியவளே….

இன்று என்னை மறந்துவிட்டு புது
கனவுகளுடன், கணவனையும் தேடி
போகிறாயாமே !!!!!!!

ஆண்கள் என்றால் அழித்து வரையும் ஓவியம்
என்றா நினைத்தாய்………..

அன்று உன் இதயம் வேண்டும், என்று கேட்டவளே
இன்று தான் தெரிகிறது நீ கேட்டது
விரும்புதலுக்காக அல்ல விளையாடுவதற்குக்காக
என்று ..

இன்று கடைக்கரை மணலில் தனியாக
உன் பெயரெழுதியபடி நான் ..