Friday, September 4, 2009

ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?






ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குட்டிப்பாம்பை நாக்கின் மீது கடிக்க விட்டால் விஷம் உச்சந் தலைக்கு எகிறி மூச்சை அடைக்கும். இதயத்துடிப்பு, மூச்சை எல்லாம் இழந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு இறந்துவிடுவார்கள். குட்டித் தூக்கம் மாதிரி, இரண்டு நிமிடங்கள் மட்டுமே இறந்து போகும் குட்டி இறப்பு. பின்னர் அதிர்ஷ்டம் இருந்து எழுந்தால் இரண்டு நாளைக்கு ஆல்ஹகால் வாடை இல்லாமல் போதையில் மிதக்கலாம். இந்த போதையைத்தான் ராஜ போதை என்கிறார்கள்.

இப்ப‌டிச் சொல்கிறார்க‌ளே த‌விர்த்து பாம்பு விஷ‌த்தை போதைக்காகப்‌ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து குறித்தான‌அதிகார‌பூர்வ‌த‌க‌வ‌ல்கள் மருத்துவப் பதிவுகளில் தேடிய வரையில் எதுவும் இல்லை. என்றாலும் கஞ்சா, ஹெராயின் போன்ற சில போதைப் பொருட்களை உட்கொண்டவர்கள் போதையின் அளவு போதவில்லையென்றும், மேலும் போதை வேண்டும் என்பதற்காகவும் பாம்புக் கடிக்குச் செல்கிறார்கள் என்பதான தகவல்களுக்கு ஆதாரம் உண்டு.

பெரும்பாலும் பணக்கார பார்ட்டிகளில் கும்மாளத்திற்கு மெருகூட்ட பாம்பாட்டிகளைக் கூட்டி வருகிறார்கள். குறிப்பிட்ட வகை பாம்புகள், அதுவும் குறிப்பிட்ட வயதிற்குள்ளான குட்டிப் பாம்புகளையே கடிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜ நாகத்தில் இருக்கும் விஷம் Neuro Toxic. சற்று வயதான பாம்புகளில் இந்த விஷத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். இத்தகைய விஷம் அதிகமுள்ள பாம்பைத் தேர்ந்தெடுத்தால் விஷம் மூச்சிழப்பிற்கு அடிகோலி, உடலின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும்.

சிலவகைப் பாம்புகளில் இருக்கும் விஷம் ஹீமோஸ்டாட்டிக் விஷம். இந்த வகை விஷம் உடனடியாக இரத்தத்தைக் கட்டியாக்கி உயிரை முடித்துவிடும். இந்த‌மாதிரியான‌கார‌ண‌ங்க‌ளால் பாம்பினைத் தேர்ந்தெடுப்ப‌தில் மிகுந்த‌க‌வன‌ம் தேவை. இந்தியாவில் பெரும்பாலும் குட்டி நாகபாம்புகளையும், மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பாம்புக்க‌டி என்ப‌து நீண்ட‌கால‌மாக‌இருந்து வ‌ருகிறது. சில‌இந்து சாதுக்கள் ம‌த‌ரீதியான‌கார‌ண‌ங்க‌ளுக்காக‌நாகப்‌பாம்பினைத் த‌ங்க‌ள் நாக்குக‌ளில் கொத்த‌ச் செய்கிறார்க‌ள். மும்பையின் தென் ப‌குதிக‌ளில் மிக‌ப் ப‌ர‌வ‌லாக போதைக்குப் பாம்புக்கடியைப் பயன்படுத்துவது உண்டு. ஒரு க‌டிக்கு ஐம்ப‌து ரூபாய் என்ற‌அள‌வில் கிடைக்கிற‌து. சென்னையிலும் உண்டு என்று சென்ற‌வார‌ங்க‌ளில் ஒரு வார‌இத‌ழின் க‌ட்டுரையில் இருந்த‌து. ஒரு க‌டிக்கு இர‌ண்டாயிர‌த்து ஐநூறு ரூபாயாம்.

விசாரித்துப் பார்த்ததில் சென்னையிலும் நூறு ரூபாய் அள‌வில் பாம்புக் க‌டி இருக்கிற‌து. ராய‌ப்ப‌ன் என்ற வட சென்னை வாழ் மனிதர் எழுப‌துக‌ளின் ம‌த்தியிலிருந்து (த‌ன‌து 20 வ‌ய‌தில்) இன்று வ‌ரை பாம்புக் க‌டியின் ச‌ந்தோஷ‌த்தில் திளைத்து வ‌ருகிறார். க‌ஞ்சா அடிக்க‌ஆர‌ம்பித்தவர், போதை இன்னமும் அதிகம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதற்காக‌பாம்புக் க‌டியையும் கூட‌ச் சேர்த்திருக்கிறார். ஆர‌ம்ப‌த்தில் 18 ம‌ணி முத‌ல் 20 மணி நேர‌ம் ம‌ய‌க்க‌த்தில் இருந்திருக்கிறார். நாட்க‌ள் ஆக ஆக‌12 ம‌ணி முத‌ல் 14 ம‌ணி நேர‌மாக‌போதை நேர‌ம் குறைந்திருக்கிற‌து. என்ன நினைத்தாரோ தெரியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதுவ‌ரையிலும் பாம்புக் க‌டிக்குப் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ள் அத‌ற்கு அடிமை ஆன‌த‌ற்கான‌த‌க‌வ‌ல்க‌ள் ப‌திவு செய்ய‌ப்ப‌ட‌வில்லை. உதார‌ண‌மாக‌ஹெராயினைத் தொட‌ர்ந்து உட்கொள்ப‌வ‌ரை திடீரென‌நிறுத்த‌ச் செய்தால் அத‌ன் விளைவு கொடூர‌மான‌தாக‌இருக்கும். இத‌ற்கு Withdrawal Symptoms என்று பெய‌ர். ஹெராயின் கிடைக்காத‌அந்த‌நேர‌த்தில் கிட்ட‌த்த‌ட்ட‌பைத்திய‌நிலையை அடைவ‌ர். தொட‌ர்ச்சியான‌ப‌தற்ற‌ம், விய‌ர்வை, போதைக்காக வேண்டி பின் விளைவுகள் குறித்து யோசிக்காம‌ல் எதையும் செய்த‌ல் போன்ற‌வை சில. தமிழ்/தெலுங்கு படங்களில் போதைக்கு அடிமையான பெண்கள் போதை வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வர் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமே, அப்படி. இது போன்ற‌Withdrawal Symptoms பாம்புக்க‌டிக்கு இல்லை.

பாம்புக்கடிக்குப் பழகியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை நிறுத்திக் கொள்ள முடியும் என்ப‌தால் இத‌னை "அடிமையாக்கும் போதை" என்று சொல்ல‌முடியாது. நேரம் கெட்டுக் கிடந்தால் "ஆளை முடிக்கும் போதை" என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Withdrawal Symptoms தொடர்பான வீடியோ.


நான் நேற்று ஒரு படம்(வால்மீகி) பார்த்தேன். அதில் பட நாயகன் பாம்பு மூலம் போதை பெறுவான்.
இதை பார்த்து வியந்த நான் எனது கணனியில் தேடி பெற்ற விடயம்தான் இது.
மேலதிக தகவலுக்காக இது சம்மந்தப் பட்ட வீடியோ படங்களையும் தேடி இதில் இணைத்து உள்ளேன்.
சற்று புதினமாகத்தான் இருக்கின்றது..
அற்ப சுகத்துக்கு இவ்வளவு ரிஸ்கு எடுப்பதா?
சின்ன புள்ள தனமா இல்ல..

Thursday, September 3, 2009

சினிமா நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள்

அஜித் ஷாலினி


விஜய் சங்கீதா


சூர்யா ஜோதிகா


ஜெயம்ரவி

Wednesday, September 2, 2009

இரண்டாம் உலகப் போரின் சில காட்சிகள்..



பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்..


தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தனது மனைவிக்கு பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று துருக்கி நீதிமன்றம் ஒன்று விநோத உத்தரவை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள டியார்பகீர் என்னும் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஹேரெட்டின் செட்டின்டாஸ் என்பவர் தனது இரு மனைவிகளில் ஒருவரையும் அவருடைய 10 வயது மகனையும் அடித்துத் துன்புறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செட்டின்டாஸ் தனது மனைவிக்கு ஒவ்வொரு வாரமும் பூக்கூடையை தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குக் கொடுத்த வர வேண்டும் என்றும், குழந்தை வளர்ப்பது குறித்து ஐந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட செட்டின்டாஸ் தன்னுடைய மனைவியின் பிறந்த நாளோ அல்லது தங்களது திருமண நாளோ தனக்கு நினைவில் இல்லை என்றும், இதுவரை தான் தன்னுடைய மனைவிக்கு பூக்களைக் கொடுத்ததில்லை என்றும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நான் வாசித்து சுவைத்த விடயம்

நினைத்தாலே இன்பம் தரும் வாசகங்கள்...

(1) கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது: அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது. எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.


(2)உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

(3)தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
(4)ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்

(5)வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் உலகம் ஏசும் வீழ்ந்தவன் வாழ்துவிட்டால் உலகம் பேசும் இதுவே உலக நியதி !!!!!!!

(6)நான் உயிர் வாழ வேண்டும்´ என்ற உறுதி மிக்க ஆசைதான் வாழ்க்கையாகிறது...

(7)மனிதனுடைய இதயக் குமறலே, அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

(8)சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் - ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது

(9)கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது

(10)முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது

(11)நண்பன் யாரென தெரிந்து கொள் அவன் நல்லவனாயினும் விலகி நில்! அறிவால் ஒருவனை அளந்து கொள்-அல்லது அனுபவித்தாவது புரிந்து கொள்.

Tuesday, September 1, 2009

ஹிட்லர் காதலியை சுரங்கத்தில் மணந்த சுவையான கதை...




ஜெர்மனித் தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து அதில் தங்கியிருந்தார் ஹிட்லர். பாதாள அறையின் கூரை மட்டும் 16 அடி பருமனுக்கு இரும்பும், சிமெண்டும் கொண்டு, குண்டு வீச்சினால் சேதம் அடைய முடியாத அளவுக்கு மிக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது. ஹிட்லரின் அலுவலகமும், படுக்கை அறையும் அங்கேதான் இருந்தன. 15 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டது. குளியலறையும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
1945 ஜனவரி 16-ந்தேதி முதல், ஹிட்லர் இங்கு வசிக்கலானார். 1804-ல் மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய நாற்காலி ஒன்று ஹிட்லரிடம் இருந்தது. அதில் அமர்ந்து ராணுவத்தினருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தார். 1945 ஏப்ரல் பின்பகுதியில் பெர்லின் நகரம் மீது ரஷிய விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.
ஹிட்லர் தங்கியிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு அருகிலும் குண்டுகள் விழுந்தன. ஈவா பிரவுன் என்ற பெண் 1930-ம் ஆண்டு முதல் ஹிட்லருடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தாள். ஹிட்லரின் நண்பர் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். அங்கு உதவியாளராகப் பணியாற்றியவள் ஈவா பிரவுன். நண்பரின் போட்டோ ஸ்டூடியோவுக்கு ஹிட்லர் அடிக்கடி போவார். அப்போது அவருக்கும் ஈவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக கனிந்தது. ஈவாபிரானும், ஹிட்லரை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதனால் மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் ஹிட்லருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
காதலியின் உண்மையான அன்பைக்கண்டு ஹிட்லர் நெகிழ்ந்து போனார். "பிரவுன்! உன் அன்பு என்னைப் பிரமிக்கச் செய்கிறது. நீ என்னிடம் எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார். "என்னை உயிருக்கு உயிராக நேசித்தீர்கள். நான் பாக்கிய சாலி. இதுவரை உங்கள் காதலியாக இருந்த நான், சாகும்போது உங்கள் மனைவியாகச் சாக விரும்புகிறேன். இதுதான் என் கடைசி ஆசை" என்றாள் பிரவுன். இந்த வேண்டுகோளை ஹிட்லர் ஏற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள், ஏப்ரல் 28-ந்தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. அன்று காலையிலேயே, தன் அறையை அலங்கரிக்குமாறு உதவியாளர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதன்படி அறை அலங்கரிக்கப்பட்டது.

சட்டப்படி திருமணப் பதிவு செய்ய நகரசபை அதிகாரி அழைக்கப்பட்டார். திருமணப் பதிவு பத்திரத்தில் ஹிட்லரும், ஈவாபிரவுனும் கையெழுத்திட்டனர். கோயபல்சும், மற்றொருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். பிறகு விருந்து நடந்தது. ஹிட்லரின் நண்பர்கள் மது அருந்தினார்கள். ஹிட்லர் தேனீர் அருந்தினார். தங்கள் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது என்பதை அறிந்திருந்த அவர்கள், கவலையை மறக்க ஆடிப் பாடினார்கள். விடிய விடிய கேளிக்கைகள் நடந்தன. காலை 6 மணிக்குத்தான் ஹிட்லரும், ஈவாவும் படுக்கச்சென்றனர்.
காலை 11 மணிக்கு, தன் உயிலை எழுதும்படி மனைவி ஈவாவிடம் கூறினார் ஹிட்லர். அவர் கூறக்கூற ஈவா எழுதிய உயில் வருமாறு: "வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருந்து என் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கு கொண்ட ஈவா பிரவுனை என் வாழ்வின் கடைசிக் கட்டத்திலாவது மணந்து கொண்டு கவுரவிக்கவேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி மணந்து கொண்டேன். நாங்கள் இறந்த பிறகு, எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும், ஈவாவையும் உடனே எரித்துவிடவேண்டும். இதுவே என் கடைசி ஆசை. என் சொத்துக்கள் எல்லாம் எனக்குப்பிறகு என் கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்குச் சேர வேண்டும்." இதுவே ஹிட்லரின் உயில்.
அன்று மாலை தன் தளபதிகள், அமைச்சர்கள், அந்தரங்க உதவியாளர்கள் கூட்டத்தை ஹிட்லர் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: "ஜெர்மனி நாட்டு மக்கள் எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. சமாதானத்தையே விரும்புகிறேன். போருக்குக் காரணம் நானல்ல. ïதர்கள்தான். ஜெர்மனி நாட்டு மக்களின் வீரத்திற்கும், தேசபக்திக்கும் இந்தப்போர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஜெர்மனி வெற்றிபெறும். இந்தப் போரில் நான் இறக்க நேர்ந்தால், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவுவேன். ஒரு போதும் எதிரிகளின் கையில் சிக்கி அவமானம் அடைய மாட்டேன். இது உறுதி". இவ்வாறு ஹிட்லர் கூறினார். பின்னர், நாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு இறுதிச் சாசனம் ஒன்றை எழுதினார். அந்தச் சாசனம் வருமாறு: "முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப்போர் வீரனாக கலந்து கொண்டவன் நான். அது நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. கடந்த 30 ஆண்டுகளாக என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன். இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஏனென்றால் போர் வெறி கூடாது. ஆயுதக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன். முதல் உலகப்போருக்குப் பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. எப்படியோ போர் மூண்டுவிட்டது. இந்தப் போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சம்மிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும். இந்தப்போருக்குக் காரணமானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜெர்மன் இளைஞனுக்கும் உணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்". இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் ஹிட்லர்.
1 1
Posted by idea mani at 4:01 AM

சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை...


சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு தொலைகாட்சி மக்களின் நண்பன் போல் அவர்களின் நன்மை தீமைகளை வெளியில் கொண்டுவரும் ஒரு அகிம்சையான ஆயுதம்.ஆனால் இன்று அது மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அவ்வளவு ஏமாற்றுகிறது.
மலையாக மக்களை வைத்து திரு.ரங்கா தன்னை ஒரு மலையாக கதாநாயகன் போல் சித்தரித்து கபடநாடகம் ஆடி வருகிறார்.

மலையகம் தங்களின் தலைநகர்,கோட்டை என்று மார்பு தட்டிக்கொள்ளும் கொள்ளும் வேளை அவர்களின் கஷ்டங்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஒரு தீர்வும் கண்டதாக தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியின் வெற்றி அது எத்தனை வருடமாக செய்கிறோம் என்பதில் இல்லை. அதன் மூலம் மக்கள் எவ்வளவு பயன் பெற்றார்கள் என்பதில்தான் உள்ளது என்பதை திரு.ரங்கா புரிந்து கொள்ள வேண்டும்.
நீக்கள் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. சுனாமி நேரம் மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போது நீங்கள் எமது உறவுகளுக்கு செய்த உதவி மிகப்பெரியது.
மற்றும் பழைய தொகுப்பாளர்கள் முகியம்தான் ஆனால் புதியவர்களின் வருகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இந்தியாவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து இங்கே நிகழ்ச்சிகளை செய்யவிடும் அளவுக்கு எமது நாட்டில் உள்ளவர்களின் திறமை இன்னும் மங்கவில்லை. தமிழின் முதல்தரம் மகளின் முதல்வன் என்பது என்ன?எஆது தமிழை கொலை செய்யும் அளவுக்கு அவர்களின் பேச்சுவழக்கு உள்ளது.
தவறுவிடுவது மனித இயல்பு அதை திருத்தாமல் இருப்பது மடமை.

தெரிவிப்பது நாங்கள் திருந்துவது நீங்கள்.