Saturday, September 19, 2009

காலம் தான் பதில் சொல்லும்.




சில கேள்விகளுக்கு பதில் கிடையாது காலம் தான் பதில் சொல்லும்.
இதற்கு முன்பும் இதுபோன்ற ஒரு படம் வெளியானது அது பின்பு பொய் என உறுதி செய்யப்பட்டது.ஆனால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எம்போன்ற மக்கள் விழிப்பு அடையும்வரை அவர்கள் கடலில் முத்துதான்.

"கர்ப்பம்,காதல்,களவு,பொய்" என்பன ஒருநாள் வெளிவரும் பிரசவத்துக்காக காத்திருப்போம் 30 வருடம் பொறுக்கவில்லையா.......

Friday, September 18, 2009

என்ன கொடுமை சேர் இது....



மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஷரியத் சட்டப்படி, நான்குக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான நைஜெர்ரில் வசிக்கும் முகமது பெல்லோ அபுபக்கர் என்ற முன்னாள் ஆசிரியர், இது வரை 86 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு பிறந்த குழந்தைகள் 170. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது, இத்தகவலை வெளியிட்டார் அபுபக்கர். நான்கிற்கு மேற்பட்ட மனைவிகளுடன் வசிப்பது குற்றம் என்று குர் ஆனில் கூறவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியானதையடுத்து நடவடிக்கையில் இறங்கினர் அதிகாரிகள். இவ்வழக்கை விசாரித்த நைஜீரிய இஸ்லாமிய விவகார உயர் நீதிமன்றம் அபுபக்கரின் பேச்சை கடுமையாக கண்டித்தது. மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று, அபுபக்கரை எச்சரித்துள்ளது.

Thursday, September 17, 2009

முதன் முறையாக உங்கள் பார்வைக்கு....

உங்கள் பார்வைக்கு முதன் முறையாக கமல் நடிப்பில் உருவாகும் உனைபோல் ஒருவன் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்கு



நான் ரசித்தவற்றை நீங்களும் ரசிக்க தருகிறேன்

இவரையும் விட்டு வைய்க்காத இலங்கை சிங்கங்கள்...


பிரித்தானிய நடிகர் மிஸ்டர் பீனின் கடன்அட்டையிலும் மோசடி: இலங்கையர் இருவர் கைது
பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடியை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக தெரிவித்தார்.

ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த இருவரையும் கைது செய்திருந்தனர்.

அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தமது நண்பர்கள் மூலமாகவே இவர்கள் இருவரும் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மலையகப் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள ஸ்தாபனத்திலிருந்தே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.

Wednesday, September 16, 2009

பரீட்சையை நெருங்குவதை கண்டு பயமா ????


அன்பார்ந்த நண்பர்களே...
பரீட்சையை நெருங்குவதை கண்டு பயமா ????
கவலையை விடுங்கள்.....
உங்களுகேன்றே உருவார்க்ப்பட்டு இருக்கும் இந்த GROUP இல் இணைவதன்
மூலம் நீங்களும் பரீட்சையில் நூற்றுக்கு நூறு MARKS வாங்க முடியும்.

பரீட்சையில் படித்து PASS பண்ணுபவர்களை விடவும் Bit அடித்து PASS
பண்ணுபவர்களே அதிகம் என்பதை அனைவர்களும் அறிவார்கள்.

Bit அட்டிப்பதில் பல வருட அனுபவம் மிக்கவர்கள் தங்களுடைய திறமைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கு ஆவலாக உள்ளார்கள்.

அன்பார்ந்த அங்கத்தவர்களே.....
நீங்களும் உங்களுடைய சுவையான அனுபவங்களை இங்கு பதிர்ந்து கொள்ளுங்கள்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
(`'•.¸ (`'•.¸(`'•.¸(`'•.¸*¤* ¸.•'´) ¸.•'´)¸.•'´)¸.•'´)♥ ♥
♥***♥♥♥Let's share your feelings with us♥♥♥***♥ ♥
(¸.•'´ (¸.•'´(¸.•'´(¸.•'´*¤* `'•.¸) `'•.¸)`'•.¸)`'•.¸)♥ ♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
buve2329@gmail.com
or
comment

Tuesday, September 15, 2009

கந்தசாமி அனுபவங்களை உங்களோடு பகிரவேண்டும்..


கந்தசாமி பட அனுபவங்களை உங்களோடு பகிரவேண்டும் என்று விரும்புகிறேன்...
உண்மையில் என்னை கந்தசாமி படம் ரசிக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அண்மையில் சூரியன் வானொலியால் வழங்கப்பட கந்தசாமி பட டிக்கெட் எனது நண்பன் மூலம் கிடைக்கப்பெற்று படம் பார்க்க சென்றோம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை படம் விக்ரமின் நடிப்பால் செதுக்கப்பட்டு இருந்தது.
படத்துக்காக தன் உடல்வாகை மாற்றும் விக்ரம் இப் படத்திலும் மாற்றி இருந்தார்.
ஒரு மாஸ் கதாநாயகன் வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து
இருந்தார். பலர் படம் சரியில்லை என்று சொன்னாலும் என்னை ரசிக்கவைத்தது.
கந்தசாமி படம்பற்றி நான் அறிந்த விடயங்களையும் இங்கே தொகுத்து தருகிறேன்.

கந்தசாமி' திரைப்படம் ஒரே நாளில் ரூ.95 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். கலைப்புலி தானு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில், விக்ரம், ஸ்ரேயா நடித்துள்ள திரைப்படம் "கந்தசாமி'. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 21ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.
.
சென்னையில் 18 தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த 16ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளன்று 1,46,976 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.95,22,498 ரூபாய் வசூலாகியுள்ளது.

இந்த தகவலை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், படத்தின் சென்னை நகருக்கான விற்பனை உரிமையை பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி யிருப்பது இதுவரை இல்லாத சாதனை என்று அவர் கூறியுள்ளார்.

முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் காட்டி வரும் ஆர்வம் இந்த படம் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்கு சான்றாக விளங்குவதாக அவர் கூறியுள்ளார்.

Thursday, September 10, 2009

இதை தவறு என்று.....


இதை தவறு என்று சிலர் சொன்னாலும்
கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிப்பதுவே மெய் என்பதுக்கு இணங்க விசாரிக்கப்பட்ட பின்புதான் உண்மை தெரியும்..
முடிவு மக்கள் ஆகிய உங்கள் கைகளில்தான்..