Tuesday, November 22, 2011

இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............




என்னை கவர்ந்த பாடல் வரிகள் என்கற்பனையில் சில மாற்றங்களுடன்...


பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன் 
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்- கொலை 
செய்ததாய் கொடி புலம்புவதோ...
பால் குடத்தில் ஒரு எறும்பு விழ 
பல்லி என்று அதை வெறுப்பது போல்
என்மனதில் சிறு ஆசை எழ 
துரோகம் என என்னை வேறுப்பதென்ன,,,,,,,,,,.
நதி வளையும் வழி தெரிவதுண்டு -விதி வழி தெரிவதில்லை 
தெரிந்துகொண்டால் அதி ருசியும் இல்லை....
இது திட்டம் போட்டு செய்த செயலுமல்ல..............
உன் மனதை நோகடிக்கும் செயலுமல்ல......
விரும்புதல் உன் உலகில் துரோகம் என்றால்...
உன் வாழ்வில் நானும் துரோகியடி........
கண்ணீர் என்னை தண்டிக்குமா -நாளை 
காலங்கள் என்ன மன்னிக்குமா..

Saturday, October 1, 2011

சுகம் காணும் என்சோகம்...

அண்மையில் லங்காஸ்ரீ கவிதை பக்கத்தில் உறுப்பினறாக இணைத்து கொண்டேன். அதற்கு சமர்பிப்பதக்காக நான் வடித்த கிறுக்கல் உங்கள் ரசனைக்கு .....


கல் உருவில் தெய்வங்கள் பலவுண்டு இவ்வுலகில்- என்சோகம் 
துடைத்திட ஒன்றும் இல்லை என்னருகில் 

உன் உரு கண்டேன் என் உடல் மனம் இழைத்தேன் 
உன் வாய் மொழியை என் தாய்மொழி என்றேன்.
உன் நகம் தீண்டி என் அகம் மகிழ்ந்தேன் அன்று- இன்று 
என் மனம் சீண்டி புறம் விட்டு சென்றாய்....
உன் நிழல் என்னுடன் உன் நினைவு என் நெஞ்ச்சுடன்
சுகம் காணும் என்சோகம் என்றும் உன் நினைவுடன் .....





Sunday, September 25, 2011

மொனம்.......

இதயத்தை ரணமாக்கும் உன் வார்த்தைகளை விட 
என்னை சாகடிக்கும் உன் மொனத்திற்கே வலி அதிகம்
இதை அறிந்தும் அறியாமல் நீ...
இது வலித்தும் வலிக்காதவனாய் நான்!!!!!!!!!!!  

Wednesday, August 31, 2011

இது உனக்கேன் புரியவில்லை.....

சிறகு நீங்கினால் பறவை இல்லை...
உடலை நீங்கினால் உயிரும் இல்லை
உன்னை நீங்கினால் நானும் இல்லை
இது உனக்கேன் புரியவில்லை.....

Thursday, April 7, 2011

hi

My First Snow Experience Slideshow: Buveraj’s trip to London, England, United Kingdom was created by TripAdvisor. See another London slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.