பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Saturday, October 30, 2010
கம்பியூட்டர் ஒரு சிறிய பேனா போன்றது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
கணனிகள் முதலில் வெளிவந்தபோது அளவில் பெரியதாக இருந்தது. பின்னர் அவை நடமாடும் தேவை கருதி சிறிய வடிவில் லாப்டொப்பாக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் அவை சில வகை கையடக்கத் தொலைபேசிகளிலும் வந்தது, ஆனால் தற்போது 5 வது தலைமுறை நானோ தொழில்நுற்ப்பம் வளர்ச்சியடைந்து அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. ஆம் தற்போது சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கம்பியூட்டர் ஒரு சிறிய பேனா போன்றது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
ஆம் தற்போது பேனாபோன்ற வடிவில் அமைக்கப்பட்ட கம்பியூட்டர்கள் வெளிவர உள்ளன. படத்தில் காண்பதுபோலவே, உங்களுக்கு 3 தொடக்கம் 5 பேனாக்களை நீங்கள் எடுத்துச் சென்றால் போதும், தட்டச்சுக்கு(கீ போர்டுக்கு) ஒரு பேனா, கம்பியூட்டர் திரைக்கு(மானிட்டர்) ஒரு பேனா போதும். உங்கள் கணனி தயார் அவ்வளவுதான், பேனாவில் இருந்து வரும் லேசர் கதிகள் மூலம் அது திரையை தோற்றுவிக்கிறது, அடுத்த பேனா உங்கள் கீ போர்டை தோர்றுவிக்கிறது. புலு ரூத் மூலம் அவை அனைத்தும் இணைந்து தமது தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.
நானோ தொழில்நுற்ப்பத்தில் இன்டல் பென்டியம் கொண்ட இவ்வகையான அபூர்வமான பேனா கம்பியூட்டர்கள் நிச்சயம் மக்களின் மனதைக் கொள்ளைகொள்ளும் என்கிறார் அதன் தயாரிப்பாளர்கள். அத்தோடு அவை சாதாரண கம்பியூட்டர்களை விட வேகமாக வேலைசெய்யக்கூடிய திறன் கொண்டது என்கிறார்கள்.
Wednesday, October 27, 2010
என் சிந்தனை ஊற்றை ஓட விட .....
Subscribe to:
Posts (Atom)