உன் அருகில் இருந்த நினைவை என்னை மறந்து விரும்புறேன்
தொட்டு விடும் தூரத்தில் நிலவது இருப்பதில்லை -அதுவறிந்து
அதன் வரவின்றி மல்லிகையவள் மலரமறுப்பதில்லை
தொட்டு விடும் தூரத்தில் என் காதல் தான் -இருந்தும்
தொட்டு விடும் நிலைமையில் என் நிலை தான் இல்லை
தொட்டு விடும் தூரத்தில் நீ இருந்தும் -என் காதல்
ஒட்டாத காந்தம் போல் தள்ளுதடி..
பூக்காத பூவது இறைவனடி சேர்வதில்லை-இதுவறிந்தும்
பூக்காத பூவாக்கின்றேன் என்கதலை..
கண்ணிரண்டு உறவாட மனமிரண்டு நினைவாட -காதலது
உள்ளத்தில் வந்துவிடும் வலி ஒன்று தந்துவிடும் .
சொந்தங்கள் பந்தாட தகுதியது நின்றாட -என் மனவலியது
கொன்றாட உன் மண நாளது வந்துவிடும்
காணாத இறைவனிடம் ஒருவாரம் கேட்கின்றேன்-என்னவள்
இதயத்தில் ஓரறையில் என் கல்லறை அமையவேண்டும்.......