Monday, August 24, 2009

படிப்பு தான் உயிர் என்று...





படிப்பு தான் உயிர் என்று இருந்தவனை
கண் பார்த்து காதல் பள்ளியில் சேர்தவளே..

உண்மையில் காதல் பள்ளியில் நீ ஒரு வல்லுனன்
என் உணர்வுகளில் உயிராய் இருந்து என்
நினைவு முழுக்க நிறைந்தவளே…….

மாற்றுவதற்கும், மறப்பதற்கும் காதல் என்ன
சிறு குழந்தையின் தவறா என்ன Huh
உன் பெயரை பதிவு செய்த இடத்தில் அழித்து இன்னொரு
பெயரை பதிவு செய்ய இதயம் ஒன்றும் கரும்பலகை அல்ல..

உதிரத்தில் கலந்து உயிரில் நிறைந்து உணர்வில் ஒன்றானது
காதலென்று தெரியதவளே !!!

பாலில் நீர் கலந்தால் கூட பிரித்து விடலாம்
என் உதிரத்தில் உயிராக கலந்தவளே
நான் எப்படி உன்னை பிரிக்க..

வார்த்தை கூட வேண்டாம் உன் பார்வை
மட்டும் போதும் என்று என் கண் கட்டி
காதல் பாடம் நடத்தியவளே….

இன்று என்னை மறந்துவிட்டு புது
கனவுகளுடன், கணவனையும் தேடி
போகிறாயாமே !!!!!!!

ஆண்கள் என்றால் அழித்து வரையும் ஓவியம்
என்றா நினைத்தாய்………..

அன்று உன் இதயம் வேண்டும், என்று கேட்டவளே
இன்று தான் தெரிகிறது நீ கேட்டது
விரும்புதலுக்காக அல்ல விளையாடுவதற்குக்காக
என்று ..

இன்று கடைக்கரை மணலில் தனியாக
உன் பெயரெழுதியபடி நான் ..

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ya.
    நல்லா இல்லையா..

    ReplyDelete