பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Wednesday, August 26, 2009
ஹிட்லரின் போர் வியூகங்களும் ஸ்ராலின்கிராட் சமரும்
உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவந்த களமுனைகளில் ஸ்ராலின்கிராட் களமுனையும் ஒன்று. ஜப் பானில் போடப்பட்ட இரண்டு அணுகுண்டு கள் ஜப்பானின் ஆதிக்கத்தையே முடிவுக்கு கொண்டு வந்தது. அதற்கு முன்னமே வர லாற்று, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ராலின்கிராட் என்னும் சோவியத்தின் நகரம் ஜேர்மனிய சர்வாதிகாரியான ஹிட்லரின் இராணுவப்பலத்தை சிதறடித்து விட்டது.
1939 இல் உத்தியோகபூர்வமாக போரை அறிவிக்க முன்னர் ஜேர்மனி பக்கத்து நாடு களை ஆக்கிரமித்துக் கொண் டது. பின்னர் 1940 இல் டென் மார்க், ஹொலண்ட், நோர்வே, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளை கைப்பற்றியது. அதன்பின்னர் இங்கிலாந்தைக் கைப்பற்ற திட்டமிட்ட போதும், அதற்கு முன்னர் சோவியத்தை கைப்பற்ற முனைந்தது.
1941 ஆடி மாதம் சோவி யத்தை கைப்பற்றும் பார்ப ரோசா நடவடிக்கையை (Oணீஞுணூச்tடிணிண ஆச்ணூஞச்ணூணிண்ண்ச்) ஜேர்மன் படைகள் ஆரம்பித் தன. 3 மில்லியன் ஜேர்மனிய துருப்புகள் 3400 தாங்கிகள் சகிதம் சோவியத்தின் எல்லை களைத் தாண்டி மூன்று முனைக ளில் முன்னேறின. ஒவ்வொரு படைப் பிரிவிலும் 14000 வீரர் களையும் 230 படைப் பிரிவு களையும் 20,000 டாங்கிகளை யும் கொண்ட சோவியத்துட னான மிகப்பெரும் சமர் இது வாகும்.
ஆரம்ப சில மணித்தியாலங் களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் சோவியத்தின் 2000 விமானங்கள் தரையில் வைத்து அழிக்கப்பட்ட துடன் லெனின்கிராட் (ஃஞுணடிணஞ்ணூச்ஞீ), உக்ரைன் பகுதி களை கைப்பற்றி தலைநகரான மொஸ்கோ நோக்கி ஜேர்மனியப் படை நகர்ந்தது. கைப் பற்றிய இடங்களில் ஜேர்மயனிப் படைகள் பெருமளவில் மக்களை கொன்று குவித்ததுடன் சோவியத்தின் 15 படைப்பிரிவுகளும் ஜேர் மனியப் படைகளிடம் சரணடைந்தன.
ஆரம்ப இழப்புகளால் பின்வாங்கிய சோவி யத் படைகள் அரசுத்தலைவர் ஜோசப் ஸ்ராலி னின் நெறிப்படுத்தலில் தமது யுத்ததந்திரோ பாயத்தை மாற்றி அமைத்தார்கள்.
சிறு சிறு கெரில்லா குழுக்களாக தமது படைகளை பிரித் தனர். ஜேர்மனிய படைகளை நெடுந்தூரம் உள்வாங்கியதுடன், பயிர்நிலங்கள், உணவுப்பொருட்கள். நீர்நிலைகள் என்பவற்றை அழித்துவிட்டும் சோவியத் படை பின்வாங்கியது. இதனால் ஆக்கிரமித்த ஜேர்மனியப் படைகள் முற்றுமுழுதாக ஜேர்மனியின் விநியோகத்திலேயே தங்கி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜேர்மனியப் படைகள் மொஸ்கோவை அண்மித்தபோது சோவியத்தின் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மிக நீண்ட ஜேர்மனியப் படை நிலைகளையும் ஊடுருவித் தாக்கின. விநியோகத்தடங்கல் சோவியத் படைகளின் தாக்குதல்களினால் ஜேர்மனியப் படைகளின் மொஸ்கோவைக் கைப்பற்றும் முயற்சி தடைப்பட்டது. தாக்குதல் எதிர்த்தாக்குதல் என ஜேர்மன் படைகள் நலிவடைய தொடங்கியது. எனினும் சோவியத் கொடுத்த விலை அதிகம். சோவியத்தை அடிபணியச் செய்வதற்கு அதன் பொருளாதார வளத்தைக் கைப்பற்ற முடிவெடுத்தார் ஹிட்லர். ஸ்ராலின்கிராட் (குtச்டூடிணஞ்ணூச்ஞீ) இது சோவியத்தின் பெருமளவு எண்ணெய் வளத்தைக் கொண்ட இச்தஞிச்ண்தண் பகுதிக்கு அருகில் உள்ள நகரம். சோவியத்தின் தொழில்துறை, தொலைத்தொடர்புகளின் மையப்பகுதியாகும்.
1942 ஆவணி மாதம் ஜெனரல் போலாஸ் (கச்தடூதண்) தலைமையில் ஹிட்லரின் 6 ஆவது துருப்புகளும் (6tட ச்ணூட்தூ), 4ஆவது கச்ணத்ஞு துருப்புகளும் ஸ்ராலின்கிராடை கைப்பற்றும் நடவடிக்கையை (Oணீஞுணூச்tடிணிண ஆடூதஞு) ஆரம்பித்தன. ஜேர்மன் படைகளின் மிகக்கடுமையான விமான, பீரங்கி தாக்குதலின் பின் தரைப்படை முன்னேறியது. ஒரு தடவையில் 600 ஜேர்மனிய குண்டுவீச்சு விமானங்கள் நகர்மீது குண்டுகளை பொழிந் தன அந்த ஒரு தாக்குதலில் மட்டும் 40,000 பொதுமக்கள் உயிரிழந்தார்கள். இதைப்போல பலநூறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நகரை சுடுகாடாக்கியபின் உள்நுழைந்த ஜேர்மனிய படைகள் எந்த ஒரு உயிரினமும் அற்ற தரைமட்டமான நகரையே கண்டன.
ஸ்ராலின்கிராட் நகரம் அப்போதைய சோவியத்தின் ஜனாதிபதி ஜோசப் ஸ்ராலினின் பெயரைக் கொண்டிருந்ததினாலும், சோவியத் தின் பொருளாதார, தொலைத்தொடர்பு மைய மாக விளங்கியதாலும் அதைக் கைப்பற்றி தனது பிரசார போரை மேம்படுத்த ஜேர் மனியும் அதை தக்கவைக்க சோவியத்தும் மிகக் கடுமையான மோதலுக்கு தயாராகின.
ஸ்ராலின்கிராட் கைப்பற்றப்பட்ட சில நாட் களின் பின் சிறிது சிறிதாக மோதல்கள் ஆரம்ப மாகின. இம்முறை சோவியத் படைகள் மட் டும் தாக்குதலில் ஈடுபடவில்லை. பொதுமக்க ளும், பொதுமக்களால் உருவாக்கப்பட்ட துணைப்படைகளும் சேர்ந்து தாக்குதலை ஆரம்பித்தன.
ஸ்ராலின்கிராட் சமரை வென்றுவிட்டோம் என ஹிட்லர் அறிவித்திருந் தார். ஆனால் இது தான் சமரின் ஆரம்பம் என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. ஸ்ராலின்கிராட்டை கைப்பற்றிய ஜேர்மனியப் படைகளை மேலும் முன்னேறவிடாது தடுக்கவும், நகரத்தில் வைத்தே பதிலடி கொடுக்கவும் சோவியத் படைகள் தயாராகின.
மேலதிக முன்னேற்றத்தைத் தடுக்க பலமான பாதுகாப்பு வியூகங்களை வகுத்ததுடன், கெரில்லா குழுக்களாக நகருக்குள்ளும் ஊடுருவி தாக்குதல்களை சோவியத்படைக ளும் மக்களும் ஆரம்பித்தார்கள். கடும் சண்டை ஆரம்பித்தது. பகலில் நாசிப்படைக ளால் கைப்பற்றப்படும் பிரதேசம் இரவில் சோவியத்தினால் கைப்பற்றப்பட்டது. Mச்ட்ச்ஞுதி என்னும் மலைப்பகுதி சண்டையின் போது இருபக்கத்திடமும் 8 தடவைகள் கைமாறியது.
ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிதைந்துபோன வீட்டிலும் கைக்குண்டுகளாலும், கண்ணிவெடிகளாலும், உபஇயந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் துப்பாக்கிமுனை கத்திகளாலும் , சாதாரண கத்திகளாலும், பொல்லுகளாலும் ஜேர்மனியப் படைகள் தாக்கப்பட்டன. பறந்துவரும் கைக்குண்டுகளைக் கூட ஏந்தி திருப்பி எறியும் உத்திகளுடன் சண்டை உக்கிர மடைந்தது. சோவியத் படைகள் பாதாள சாக்கடைகள், தண்ணீர்க் குழாய்கள், பதுங்குகுழிகள் என்பவற்றினூடாக ஊடுருவித் தாக்கின.
இச்சண்டையில் குறிபார்த்து சுடும் (குணடிணீஞுணூ) வீரர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. சோவியத்தின் பெருமளவான குறிபார்த்து சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். முதலில் ஜேர்மனியப் படைகளை வழிநடத்திவரும் அதிகாரிகள் வீழ்த்தப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு பின்னால் வரும் சிப்பாய்கள் குறிவைக்கப்பட்டார்கள். இதில் மிக முக்கியமானவர் ஙூச்டிtண்ஞுதி இவர் குறிபார்த்து சுடும் பயிற்சி ஆசிரியராக பணியாற்றியதுடன், தனி ஒருவராக நின்று 242 ஜேர்மன் படையினரை சுட்டு வீழ்த்தினார்.
அங்கு நடந்த கடும் சமரை ஒரு சோவியத்தின் ஜெனரல் இப்படி விபரிக்கிறார் சில நாட்களில் ஒரு தனி வெடியோசையை கேட்க முடியாது நாள் முழுவதும் தொடர்ச்சியான வெடிப்பதிர்வுகளே நகரை உலுக்கின’. சண்டையில் காயமடைந்த கஞுtணூணிதி என்ற பீரங்கிப்படை வீரர் தனது உபஇயந்திர துப்பாக்கியால் அருகில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் நிலை கொண்டிருந்த நான்கு ஜேர்மன் படையினரை கொன்றுவிட்டு மேல் தளத்தில் இருந்த மூன்று படையினரையும் சுட்டுவிட்டு அமைதியாக தனது படையுடன் இணைந்து கொண்டான். அதாவது ஒவ்வொரு படைவீரரும் தமது உச்ச பங்களிப்பை செய்திருந்தனர்.
சோவியத்தின் ஜெனரல் இடதடிடுணிதி தனது படைகளை ஜேர்மனியப் படைகளுக்கு மிக அண்மையாக நகர்த்தினார். இதனால் ஜேர்மனிய வான்படைகளின் குண்டுவீச்சில் ஜேர்மனிய படைகளே இலக்கானார்கள். இதே சமயம் ஜேர்மனியப் படைகள் எகிப்து, மொரோக்கோ மற்றும் ஆபிரிக்காவில் பேரிழப்பை சந்தித்தன.
இச் சந்தர்ப்பத்தில் சோவியத் தனது பெரும் தாக்குதலான ஸ்ராலின்கிராட் மீட்புப்போரை (Oணீஞுணூச்tடிணிண க்ணூச்ணதண்) ஜெனரல் ஙூடதடுணிதி தலைமையில் 10 இலட் சம் வீரர்கள் 14,000 பீரங்கிகள், 1000 தாங்கிகள், 1350 போர் விமானங்கள் சகிதம் நவம்பரில் ஆரம்பித்தது. நான்கு நாட்களுக்குள் எதிரி நிலைகளை ஊடறுத்து ஜெனரல் போலாஸ் தலைமையிலான 280,000 ஜேர்மன் படையினரை சுற்றி வளைத்தன. விநியோகப்பாதைகள் ஏதும் அற்றநிலையில் களத்தில் இருந்து பின்வாங்க பலதடவை ஹிட்லரிடம் போலாஸ் மன்றாடினார். ஆனால் ஹிட்லர் உதவிப்படைகள் அனுப்புவதாகக் கூறி பின்வாங்கும் திட்டத்தை நிராகரித்து விட்டார்.
விமானங்கள் மூலம் உணவு, ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன ஒருநாளைக்கு 500 தொன் பொருட்கள் தேவையான போது 100 தொன்னையே விநியோகிக்க முடிந்தன. அதிலும் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும் போது விநியோகம் கிடைப்பது அரிதாகியது. உணவுப்பொருட்கள், ஆயுதங்களின் அளவு ஜேர்மனியப் படைகளுக்கு மட்டுப்படுத்தப்பட் டது. போர் விரைவில் முடிந்துவிடும் என்ற அபார நம்பிக்கையில் வெப்ப உடைகள்கூட ஜேர்மனியப் படைகளால் தேவையான அளவு எடுத்துச்செல்லப்படவில்லை. சோவியத்தின் குளிர் மைனஸ் 30 (30) பாகைக்கு கீழிறங்கியது. சோவியத்தின் குளிர் அதன் படைகளுக்கு பழக்கமானது ஆனால், ஜேர்மன் படைகளோ குளிரினாலும் பட்டினியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக மரணமடைய தொடங்கின.
சோவியத் தனது படை நடவடிக்கைக்கு காலநிலையையும் கருத்தில் கொண்டே வியூ கம் வகுத்திருந்தது. ஜேர்மனியப் படைகளின் உணவுப்பங்கீடு ஒருநாளைக்கு ஒருவருக்கு 100 கிராம் பாணில் இருந்து 50 கிராமாக சுருங்கியது. படைவீரர்கள் தங்கள் குதிரை களையே கொன்று தின்று உயிரைக் காப்பாற்றினார்கள். மூன்றுமாத முற்றுகைக்குப் பின் சோவியத் படைகள் ஜேர்மனியப் படைகளை சரணடைய கோரின. ஆனால் ஹிட்லர் அனுமதி மறுத்ததுடன் ஜெனரல் போலாஸை பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தினார்.
ஜேர்மன் வரலாற்றில் எந்த ஒரு பீல் மார்ஷலும் சரணடைவதில்லை. எனவே போலாஸ் இறுதிவரை சண்டையிடுவார் என ஹிட்லர் நம்பினார். இருநாள் சரணடையும் காலக்கெடு முடிவடைந்ததும் சோவியத் படைகள் ஜேர்மனியப் படைகளின் விமானத் தளத்தையும், ஓடுபாதையையும் கைப்பற்றிக் கொண்டன. ஜேர்மனியப் படைகளின் இறுதி விநியோக வழியும் முற்றாக தடுக்கப் பட்டநிலையில் சோவியத்தின் கடும் தாக்குத லில் சின்னாபின்னமாகிய படைகள் இறந்தவர் கள் போக மிகுதிப்பேர் 1943 ஆம் ஆண்டு மாசி மாதம் 2ஆம் நாள் சரணடைந்தார்கள்.
சரணடைந்தவர்களில் ஹிட்லரின் நம்பிக் கைக்குரிய தளபதி போலாஸும் அடங்குவார். ஜேர்மனிய சரித்திரம் மாற்றப்பட்டது. போலாஸ் சரணடைந்ததை கேள்விப்பட்ட ஹிட்லர் “போர்க்கடவுள் மறுபக்கம் போய்விட் டார்’ என்று கூறினார். ஸ்ராலின்கிராட் சமரில் நான்கு இலட்சம் ஜேர்மன் படைகள் மாண்டு போக 24 ஜெனரல்கள் உட்பட 110,000 வீரர் கள் சரணடைந்தார்கள். சோவியத் பல இலட் சம் வீரர்களையும், மக்களையும் இழந்தது. ஜேர்மனியின் ஒவ்வொரு கிராமத்திலும் மரண ஓலம் எழுந்தது, ஹிட்லரின் பேச்சாளர் கேயாபஸ்ஸின் பொய்கள் எல்லாம் தவிடுபொடியாகின.போரின் வலியை ஜேர்மனிய மக்கள் உணர்ந்தார்கள் ஆனால் காலம் கடந்து விட்டது. ஸ்ராலின்கிராட்டில் ஜேர்மனியப் படைகள் இழந்த ஆள், ஆயுதப் படை வளங்களினால் அதன் போரிடும் வலு உடைந்து விட்டது. எனவே ஜேர்மன் நோக்கி முன்னேறிவரும் சோவியத் மற்றும் நேசப்படைகளை தடுத்து நிறுத்த ஜேர்மன் படையால் முடியவில்லை. ஜேர்மனி வீழ்ந்தது, போர் முடிவுக்கு வந்தது.
ஸ்ராலின்கிராட் தோல்விக்கு உலக இராணுவ ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்? ஹிட்லரின் திறமையற்ற யுத்த தந்திரம், பாதுகாப்பற்ற விநியோகப்பாதை, சோவியத்தின் கெரில்லா யுத்தமும் அதனுடன் கூடிய முற்றுகைப்போரும், சோவியத்தின் காலநிலை, சோவியத்தின் படைப்பலத்தை சரியாக கணிக்கத்தவறிய ஹிட்லரின் பிடிவாதம் என்பன இந்த சமரின் தோல்விக்கான முக்கிய காரணிகளாகும். போரின் தோல்விக்கு என்ன காரணம் கூறுகிறார்கள்? ஜேர்மனியப் படைகளின் பாரிய ஆள், ஆயுத இழப்புகளே காரணம். அதாவது ஸ்ராலின்கிராட் ஜேர்மனின் போரிடும் வலுவை சிதைத்து விட்டது.
நன்றி
பிரான்ஸிலிருந்து வெளிவரும் எரிமலை மாத இதழுக்கு
இது எனது சொந்த ஆக்கம் அல்ல இது என்னை கவர்ந்த ஆக்கம் உங்களுக்கும் சுவைக்க தருகிறேன்
நாம் பெற்ற இன்பம் பெறுக நம் சொந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment