Tuesday, August 25, 2009

சுடராகும் என் காதல் ஜோதி

இருபது  வயதிலே இனிமையான அனுபவமாய்
  என்னுள் நுழைந்தது இனிமையான ஒரு காதல்.
தாய் அன்பை மறக்கவைத்து தங்கை அன்பை இழக்கவைத்து
  இனியவளே உன் அன்பை பெறவந்தேன்.
வஞ்சகம் நிறைந்த நட்பு என்னுடனே பின்வந்து-என்அன்பை
  உன் தாய் காதினிலே தீ இட்டது.
காதலுக்கு எதிரிகள் பலவுண்டு இவ்வுலகில்-ஆனால்
 காதலரே எதிரியான கதையானது நம் காதல்.
 
 காலன் அவன் கைதனிலே அகப்பட்ட  உயிர் போல
      ஜீவன் இழந்தது என் காதல்  
எத்தனை உறவுகள்  தரணியிலே வந்தாலும் - உடன்
 வந்த சொந்தம்தான் இறுதிவரை கூட வரும்
உண்மையான காதலுக்கு வலிகளும் இன்பமாகும்
 பிரிவுகள் காதலையே வலிமையாக்கும்
சுடச்சுட உறுதியாகும் செங்கல் போல்
 துயர்வர வர உறுதியாகும் நம் காதல்
தூயவள் அன்பினை முழுமையாக நான் பெறவே
 சுடராகும் என் காதல் ஜோதி

என்வழி வந்து என்விழிநீர் துடைத்த என் காதலுக்கு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment