Sunday, May 31, 2009

காதல் அழகானது

ரொம்ப நாளைக்கு பிறகு நான் மிகவும் ரசித்த பாடல்

நீங்களும் ஒரு தடவை பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்

"இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி"



காதல் சாம்ரஜயம் பட பாடல்

இந்த படம் ரிலிஸ் ஆச்சானுதெரியல தெரிஞ்சா சொல்லுங்க

விஜய்யின் அரிய படங்கள் ...........................


சும்மா பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க.



விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பார்கள். 
எவ்வளவு உண்மைன்னு இப்பதான் புரியுது.
உங்களுங்கு தெரியுதா




எல்லா நேரத்துலையும் ஹிரோவா இருக்கமுடியுமா 
அதுதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி வேற எதுவும் உள்குத்து இல்லைங்க.



தலைவரை லோகல் ஹிரோன்னு யாரு சொன்னது.
அவரோட சிஷியாந்தாங்க பக்கத்துல இருக்குரவர்




தைரியம்ன்னா என்னன்னு கேக்குறவங்குளுக்காக.
சத்தியமா டூப் போடாம எடித்ததுங்க.




டாக்டர்தாங்க நம்ம தலைவர் வேனுமுன்னா அவர் பக்கத்துல பாருங்க.




இன்னும் புரியலையா அடுத்த படத்தை பாருங்க.........


மக்கள் தளபதி ஆயிட்டாருங்க....... 
அடுத்து என்னன்னு கேக்குறிங்களா
அடுத்த படத்தை பாருங்க.....
.........................
...............
.....

அளவுக்கு மிறினா இப்படிதாங்க................

அளவுக்கு மிறினா இப்படிதாங்க................


நிறய கண்டைனரை பின்னாடி ஏத்திட்டதால வண்டி கொடை சாஞ்சிடுச்சி.


கவனகுறைவும் அலசியமும் எவ்வளவு அவமானத்தை
ஏற்படுதிவிட்டது பாருங்க.





பின்னாடி ரன்வேயோடா வுக்கந்துடுச்சி............





அட தலைகனம் இல்லனாகூட் பிரச்சனைதான் போல இருக்கு...................






பறக்க ஆரம்பிச்சிடுச்சோ................






Friday, May 29, 2009

நான் சுவாசிப்பது இன்றே கடைசி...........

நீ மிச்சம்
விட்டு சென்ற
அந்த ரோஜாவுடன்
ஒற்றையாக நான்
அதே நதிக்கரையில்
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.

போர்முனையில்
புதைந்துப் போனதாக
ஊர் பேசுகின்றது.
உண்மைதானா?
நீ என்னுள் வாழ்வதாக
சொன்னது,சிருங்காரா?

உன் இதழ் பதித்து
பூவின் இதழில் இட்ட
முத்தத்தின் வாசம்
கரையெல்லம், நீ என்றே
பரவிக்கிடக்கின்றது.

மீண்டும் வருவதாய் இருந்தால்
இன்றே வந்துவிடு.

மனிக்கட்டு நரம்புகள்
அறுபட்டு,  நதிக்கரையெல்லாம்
குருதியின் வாசம்.

நான் சுவாசிப்பது
இன்றே கடைசி.

என் முகம்தனில்…


திருமேனி தரிசனம்
தினம்தறித்த கண்கள்
உன் தொழைதலில்
துவண்டு கிடக்கின்றது
என் முகம்தனில்…

விழியில் பிறந்து
கன்னம் கடந்து
இதழினை கடந்த
உப்புக்கரைசலோடு
எனை கடந்து போனாயோ?

பாதி தூக்கதில்
என்னை கண்விழிக்கச்செய்யும்
கனவாகப் போனாயோ?

என் கவிதைப்
புத்தகங்களின் ஓரங்களை
தின்றுப் போன கரப்பானின்
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?

பறிக்க மறந்த
பூவின் மகரந்ததில்
புதைந்திருக்கின்றாயோ?

ஊஞ்சல் காற்றாய்
என் குழல் சுருள்களில்
உன்னை சூடிக்கொண்டாயோ?

எதுவாக
இருக்கின்றாய் நீ,
நான் மட்டும்
வாழும் இவ்வுலகில்.

உனக்கும் சேர்ந்து நானே காதலிக்கிறேன்!

*
நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!

சில்மிஷியே
அருகினில் வா!

*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

"தேவதை ஜாக்கிரதை"

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்

பதறுகின்றது என்
மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..

*
நீ 'ம்' கூட
சொல்லவேண்டாம்

கடைக்கண்ணால்
மட்டும் பார்

உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே

எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
"க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்"

புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது

கோபமாய் வருகின்றது

தேவதையே..

*
நீ
தாமதமாகவே

வருவாய் என்றாலும்

நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை

களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்

முத்தம்.

 *
நீ என்னுடன்
சண்டையிடுவதே

முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்

அது உனக்கும்
தெரியும்

பின் எதுக்கு
சண்டை?

*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ

பத்திரப்படுத்த
வேண்டும்

என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..

*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்

உண்மையும் உண்டு.

*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது

அது உன்னுடன்
மட்டும் எனும்போது..

*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே

உன்னிடமிருந்து
மட்டும்

*

இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை

உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?

*

நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே

என்னை கவலையடையச்செய்கின்றது

"நான் உன்னை காதலிக்கின்றேன்".

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்

உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்

*

உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்

நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்

*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்

நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…

*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்

*
உன்னை கண்டமுதல்

இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு

*
என் கால்களிடம்
கேட்டுப்பார்

உனக்காக காத்திருந்த
தருணங்களில்

என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..

உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன

*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

*

நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு

தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*

உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..

நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்

உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!

*

நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன

உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்

*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…

*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

*
வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்*
உன் நிலம்
மழைப்பொழிய

காத்துக்கிடக்கின்றது
என் வானம்

முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்

*நில்
கவனி
காதலில்
காதலி

*

என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்

என் மனசு.

*
என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை

பெயர்பெற்றது
தென்றலென்று.

*

கள்ளப் பார்வையில்.........


புன்னகைத்து
விட்டுச்சென்ற
உன் ஞாபகத்தின்
சுவடுகளின் சூடு
இன்னமும் என்
இதயக்கூட்டிலே
ஏங்கிக்கிடக்கின்றது!

எத்தி நின்று
கள்ளப் பார்வையினில்
என் உயிர் வேர்களை
உன்னிடம் நோக்கியே
பயணிக்க செய்கிறது
உந்தன் கன்னக்குழிகள்!

சேய் விட்டு பிரியும்
தாயினை கை நீட்டி
அழைத்து ,பின் தொடரும்
பிஞ்சு கால்கள் போல!

மனைவியரைக் காக்கும் புதிய சட்டம் குறித்து மலேஷிய நாடாளுமன்றத்தில் விவாதம்

   

malaysia-flag-iconமலேசியாவில் கணவன்மார்கள் தமது மனைவியை "நீ அசிங்கமாக இருக்கிறாய்!" என்பது போன்ற வார்த்தைகளால் இழிவுபடுத்துவதை தடுக்கும் சட்டம் குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

மலேசியாவில் குடும்பத்துக்கள் நடக்கும் வன்முறை தொடர்பான சட்ட திருத்தத்தில் பெண்களை இழிவுபடுத்துவதும் குற்றமாக்கப்படுகிறது.

இந்த சட்ட வரைவை முன்வைத்துள்ள அமைப்பு, மனைவியின் உடற் தோற்றத்தை இழிவுபடுத்துவது உள்ளிட்ட உணர்வு ரீதியான துன்புறுத்தல்கள்
குற்றமாக்கப் பார்க்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்களை உளவியல் ரீதியான வன்முறைகளில் இருந்து சட்டரீதியாக பாதுகாக்கத் தேவையுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

ஓசோவின் பகவத்கீதை ஒரு தரிசனம்

புராண காலத்து மனிதர்களிடம் பல விசேட சக்திகள் இருந்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. தொலைவில் நடப்பதை இங்கிருந்தபடியே கூறுவது, எதிர்காலத்தில் நடக்கப்போவதை இன்றே திட்டவட்டமாக கூறுவது, கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற பல ஞான சக்திகளை பண்டைய புராண காலத்தவர்கள் பெற்றிருந்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும் புராணங்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான சக்திகள் எல்லாம் உண்மையாகவே புராண காலத்தவர்கள் பெற்றிருந்தனரா? அல்லது இலக்கியங்கள், புராணங்கள் போன்ற நூல்கள் கதைகளை மெருகூட்டுவதற்காக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான யுக்திகளை கையாண்டுள்ளனவா? என பல சந்தேகங்களை எம்மிடம் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சக்திகள் எல்லாம் தற்காலத்தவர்களிடம் அதாவது நம்மில் யாரிடமாவது உள்ளதா? அல்லது இறைவனிடம் வரம் பெற்றவர்களிடம்; மட்டும் தான் இந்த சக்திகள் எல்லாம் இருந்ததா என ஆராய்வோம்.

பகவத்கீதை உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சஞ்சயனை பற்றி ஆராய்வோம். வெகு தூரத்தில் நடக்கும் பாரதப்போரை தனது கண் தெரியாத மாமனாரான திருதராஸ்டினருக்கு அவருக்கு அருகில் இருந்தபடியே போர்களச்செய்திகளை உடனுக்குடன் விளக்கி கூறும் இந்த சக்தியை பற்றி ஆராய்வோம்.

நம்மிடம் இரண்டு கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். அருகில் என்ன நடக்கின்றது என்று கூட சற்று திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இந்த சஞ்சயன் தொலைவில் நடக்கும் விடயங்களை சம்பாசனைகளுடன் கூடிய காட்சிகளாக அறிந்து கொள்ளும் சக்தி(அதாவது audio & video உடன் ) நமது தொலைக்காட்சிகளில் தூர இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது போலஸ சுருக்கமாக சொல்லப்போனால் நமது 3G கையடக்கத்தொலைபேசி தொடர்பாடல் போல.ஆனால் நாம் இதைப்பற்றி பண்டைய நூல்களை ஆதாரமாக கொண்டு ஆராய்ந்து பார்த்தால் நாம் பார்ப்பதற்கு உதவும் இந்த இரண்டு கண்கள் மட்டுமே கண்கள் இல்லையென்பதை யோக சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இடம்,காலம் முதலிய எல்லைகளை கடந்து நோக்கும் சக்தி வாய்ந்த கண்களும் மனிதனிடம் உள்ளது என்கிறது.

இதை அறியாத நமது மனம் சஞ்சயன் அவ்வளவு தொலைவில் எப்படி பார்கிறான்? அவர் எல்லாம் வல்லவரா? தூர திருஸ்டி என்பதெல்லாம் உண்மையானதா? இவையனைத்தும் நமது யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமானதா? என்ற பல கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றது. ஆனால் யோக சாஸ்திரம், இந்த தூர திருஸ்டி ஒரு அபுர்வமான சக்தி ஒன்றும் அல்ல. சர்வ வல்லமைக்கும் தூர திருஸ்டிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.அது ஒரு சாதாரண சக்தி தான். எந்த ஒரு மனிதனும் தீவிரமாக முயற்ச்சித்தால் இந்த சக்தியை மலர செய்ய முடியும் என்கிறது.

சில சமயங்களில் இயற்கையின் சில விசித்திர விளையாட்டினால் சில மனிதர்களிடம் இத்தகைய சக்திகள் சகஜமாகவே மலர்ந்து பிரகாசிக்கின்றன. இனி இத்தகைய விசேட சக்திகளை தற்காலத்தில் யாராவது பெற்றுள்ளார்களா? எனப்பார்ப்போம்.

ஆம், அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் டேட் ஸீரியோ. டேட் ஸீரியோ பற்றிய செய்திகளின் உதவியால் நாம் சஞ்சயனின் சக்தியை உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் சஞ்சயனின் காலம் புராதனம் ஆகிவிட்டது.

டேட் ஸீரியோ பல 1000 மைல்களுக்கு அப்பால் எதையும் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவராம். பார்பது மட்டுமல்ல பார்க்கும் நிகழ்ச்சிகளை அவரது கண்கள் சித்திரமாக பிரதிபலிக்கும் சக்தி பெற்றவையாம். நாம் இங்கிருந்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கின்றோம் நியோர்க் நகரில் வசிக்கும் அவரிடம் பாகிஸ்தானில், தற்ப்பொழுது என்ன match நடக்கிறது, யார் யார் துடுப்பெடுத்தாடுகின்றனர், எத்தனை ஓட்டங்கள் என்பதையெல்லாம் தமது அபுர்வ சக்தியால் அறிந்து கொள்ள முடியுமாம். (தொலைக்காட்சியின் உதவி இல்லாமல்)

இலங்கையில்
, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தற்பொழுது என்ன நிகழ்வு நடக்கின்றது என்று யாராவது கேட்டால் 5 நிமிடங்கள் கண்ணை மூடி தியானம் செய்வாராம். அவர் கண்ணை திறக்கும் போது அவரது கண்ணில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் அவரது கண்ணில் படமாக ஓடுமாம். Camera வின் உதவியால் அவரது கண்ணில் தெரியும் காட்சியை படமெடுக்கவும் முடியுமாம். ஆயிரக்கணக்கான அத்தகைய படங்களும் சித்திரங்களும் எடுக்கப்பட்டுள்ளன. டேட் ஸீரியோவின் கண்கள் வெகுதூரம் வரையிலும் எந்த விதமான நிகழ்ச்சிகளையும் பார்ப்பது மட்டுமன்றி சித்திரமாக படம் பிடித்துக்கொள்ளும் வல்லமை பெற்றதாம். (unlimited zooming) தற்கால நவீன கமராக்களை விட பல மடங்கு தொழில்நுட்பம் வாய்ந்தது.

இவ்வளவு சக்தி படைத்த இந்த மனிதரை பற்றி கூறும் போது இவர் கடவுள் பக்தி மிகுந்தவர், ஞானம் பெற்றவர் போல என்று நாம் எண்ணுவோம். ஆனால் வேடிக்கையை பாருங்கள் அவர் ஆத்ம ஞானியோ, ஞானப்பழமோ அல்லவாம். அவரது வாழ்க்கை முறையும் சாதாரண மனிதர்களைப் போல சாதரணமானது தானாம். ஆத்மா, கடவுள், சாதனை என்ற எதை பற்றியும் எதுவும் அறியாதவராம். ஆக அவரிடம் இருந்ததெல்லாம் ஒரு விசேட சக்தி. தூரதிருஸ்டி! அதே போலத்தான் சஞ்சயனும்.

இனி இன்னொரு விசேட சக்தியைப்பற்றி ஆராய்வோம். நாம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் 'விவேக்'ற்கு விபத்து ஏற்பட்டவுடன் பல புதிய சக்திகள் தோன்றுவதாக அதாவது மிருகங்கள் பேசுவது, பெண்கள் மனதில் நினைப்பது போன்றவற்றை அறிந்துகொள்ளும் சக்தி போன்ற பல விசேட சக்திகள் ஒவ்வொரு விபத்து ஏற்படவும் மாறி மாறி தோன்றுவதாக அந்த நகைச்சுவை காட்சி அமைந்திருக்கும்.

ஆனால் நாம் அதை நகைச்சுவைக்காக மட்டும் பார்த்து விட்டு நிறுத்தி விட்டோம். ஏனெனில் இது நகைச்சுவைக்கு பொருந்தும் ஆனால் மனிதனின் அன்றாட யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமாகாது என்று விட்டுவிட்டோம். ஆனால் இதைப்பற்றி நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் இவ்வாறான சில விபத்துக்களில் மாட்டிக்கொண்டு புதிய சக்தியை பெற்றுக்கொண்டவர்களும் நம்மில் சிலர் வெளியுலகுக்கு தெரியாமலே இருக்கிறார்கள்.

ஆம். சில வருடங்களுக்கு முன்பு ஸ்கண்டினேவியாவில் ஒருவர் கார் விபத்தினால் தலையில் பலத்த காயத்துடன் நினைவிழந்தார். மருத்துவமனையில் தன் நினைவை மீண்டும் அடைந்த போது, காயத்துடன் சம்பந்தப்படாத மற்றொரு சங்கடம் ஏற்பட்டது.அவர் காதுகளில் சதா சங்கீத ஒலி கேட்க ஆரம்பித்தது!தனக்கு மூளை கலங்கிவிட்டதோ என்று மிகவும் பயந்து விட்டார்,அந்த மனிதர்!ஆனால், ஓரிரு தினங்களில் இசை ஒலிகளை அடையாளம் கண்டு கொள்ளவும் புரணமாக சுய நினைவுடன் விசாரணை செய்யவும் முடிந்தது. ஆனால் இருபத்து நாலு மணிநேரமும் ' 'non stop programme'' செவியில் பல வித பரிசீலனைக்கு பிறகு, ஆராய்ச்சிகளுக்கு பிறகு தெரிய வந்த உண்மையென்னவென்றால் பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு வானொலி நிலையத்தின் ஒலி அலைகள் தான் அவர் கேட்டு வந்திருக்கிறார் என்பதும், அத்தகைய அதிசயமான சக்தியை அவர் காதுகள் பெற்றுள்ளன என்பதுமே.அவர் காதுகளை தீவிரமாக பரிசீலித்தார்கள். அவற்றில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆடிபட்ட காரணத்தினால் காதுகளில் மறைந்திருந்த ஏதோ ஒரு சக்தி வெளிப்பட்டு செயலாற்ற தொடங்கிவிட்டது! பாவம், அவருக்கு ' 'operation' செய்ய நேரிட்டது. ஏனெனில் இருபத்து நாலு மணிநேரமும் தொடரும் நிகழ்ச்சிகளை 'on off" செய்ய எந்த வித உபாயமும் தெரியவில்லை!

இதே போன்று ஜந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்குப் பகல் நேரத்திலேயே வான வெளியில் நட்சத்திரங்கள் தெரிந்தன! அவரும் மாடியிலிருந்து விழுந்த அடிபட்டுகொண்டவர். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. வேறு எங்கும் போவதில்லை சுரியனின் பிரகாசத்தினால் மறைந்திருக்கின்றன. இரவில் சிமிட்டுகின்றன, சுரிய ஒளி மறைந்தவிட்ட காரணத்தினால். ஆனால் சரியனின் பிரகாசத்தையும் மீறி கண்கள் பார்க்க முடிந்ததால் பகலிலும் தாரகைகளை பார்க்க முடியும்.அந்த பெண்மணிக்கும் 'operation' செய்ய வேண்டியதாயிற்று!

ஆக பகலில் நட்சத்திரங்களைப் பார்க்கும் சக்தியும் கண்களில் ஒளிந்திருக்கிறது. வெகு தூரத்தில் உள்ள வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கேட்கும் சக்தியும் காதுகளில் ஒடுங்கியிருக்கிறது. கால தேச பரிணாமங்களை மீறிக் காணும் சக்திகள் புலனில் மறைந்திருப்பதற்கும் ஆன்மீகத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லை. இதிலிருந்து சந்தேகமின்றி சஞ்சயன் விசேட சக்தியுள்ள மனிதன்தான் என்பது புலனாகிறது.

விண்வெளி ஓடங்களை விண்ணுக்கு செலுத்தும் பல நாடுகள் மத்தியில் தற்போது ஓர் புதுப்பிரச்சனை கிளம்பியுள்ளது. என்னவெனில் இயந்திரத்தையே முழுமையாக நம்பி மனிதனை வானவெளிக்கு அனுப்புவது அபாயகரமானது. எனவே இதற்கு மாற்று வழியாக இந்த அபுர்வ சக்திகளை மனிதன் மத்தியில் எப்படி சுயமாக உருவாக்குவது என ஆராய்ச்சிகள் நடைபெறகின்றன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெறுமிடத்து விண்வெளியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆக பண்டைய புராணங்களும், இலக்கியங்களும்,சாஸ்திரங்களும் பண்டைய காலத்தவர்கள் பலர் பெற்றிருந்ததாக கூறப்படும் இந்த அபுர்வ சக்திகள் உண்மையானவை தான் என பல ஆராய்ச்சிகளின் விளைவாக நாம் அறியக்கூடியதாகவுள்ளது.

எங்கேயோ போரில் இறந்து போன படைவீரர்கள் போலவும் இருக்கு..............

அடையாளம் காண முடியாத சடலங்களும் அவற்றின் எச்சங்களும் எங்கேயோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. (எனக்கு வந்த மெயிலிலை எந்த இடம் என்று போடவில்லை. அதால நான் பொய்யாக ஒரு இடத்தின் பெயரை போட விரும்பவில்லை. அதுதான் எங்கேயோ என்று போட்டிருக்கிறன். ஓகே…)

எனக்கு இந்த சடலங்களின்; எச்சத்தின் படத்தை பார்க்கும் போது எங்கேயோ போரில் இறந்து போன படைவீரர்கள் போலவும் இருக்கு. வேற்றுக்கிரக வாசி போலவும் இருக்கு. வேற ஏதோ போலவும் இருக்கு. சரி என்னண்டு நீங்க கண்டுபிடிங்க பாப்பம்.




கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்

'சுனாமி' வரும் போது கடலுக்கு பக்கத்தில நிண்டவங்க பாதிக்கப்பட்டதை விட அத வாய் பார்க்க போய் மாட்டிக்கிட்டவங்க தான் அதிகம்.

எங்கடையளுக்கு வாய் பார்க்கிறதெண்டால் காணும். அதுக்கு இன்னொரு நல்ல உதாரணம் இவர்.

இங்க பாருங்க இந்தப்புத்திசாலியை மண் சரிவை close up பார்க்கிறாராம்.

ஆனால் இவர் இப்ப மேல நிண்டு கொண்டு கீழ பார்க்கிறார். இன்னும் கொஞ்சத்திலை கீழ நிண்டு கொண்டு மேல பார்ப்பார்.

(கீழ நிண்டு கொண்டு எங்க மேல பார்க்கிறது. ஒரேயடியா மேல தான் போகணும்.)

சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டேயிருங்க.

நேற்று வாசித்த புத்தகமொன்றில (அடப்பாவி நீ புத்தகம் வேற வாசிப்பியா எண்டெல்லாம் நீங்க என்னை "இன்சல்ற்" பண்ணக்கூடாது. ஏன்னா இப்பல்லாம் வலைத்தளம் எழுத தொடங்கினா பிறகு புதுசா ஏதாவது தேடணும் வித்தியாசமா ஏதாவது பதிவிடணும் எண்டு ரொம்ப முயற்ச்சிக்கிறன். அதிலயும் வலைத்தளம் நல்லா எழுதிறனோ இல்லையோ ஒரு விதத்திலை என்னோட தேடல் ஆற்றல் ரொம்ப அதிகரிச்சிட்டுது.

சரி அப்பிடி என்ன புத்தகம் "கிராமத்தின் சிரிப்பு" என்டொரு புத்தகம் தான் அது. அதில நிறைய வகை வகையான நகைச்சுவைகள் இருந்தன. அதில சில எங்கேயோ கேட்டமாதிரியான நகைச்சுவையாகவும், சில சிரிக்கமுடியாத நகைச்சுவையாகவும் இருந்திச்சு. ஆனால் புத்தகத்தின் கடைசி பகுதியில ரொம்ப வித்தியாசமா "வைத்தியின் நகைச்சுவைகள்" என்றொரு பகுதியிருந்திச்சு அதில வைத்தியென்றொருவர் யாழ்ப்பாணத்தில இருந்தவராம். அவருடைய சாதரண பேச்சிலேயே நகைச்சுவை கலந்திருக்குமாம். அது தவிர அவருடைய சாதாரண பேச்சில "லொஜிக்"கான நகைச்சுவைதான் அதிகமாக இருக்குமாம். அவர் தற்போது இறந்துவிட்டாராம். எனவே நூலாசிரியர் இவருடைய வாழ்க்கையில நடந்த நகைச்சுவை விசயங்களை அவருடைய மனைவியின் உதவியோடு இந்தப்புத்தகத்தில தந்திருக்கிறார்.

சரி விளக்கம் தாரன் எண்டு உங்கட கழுத்தறுக்கேல்ல. அந்தப்புத்தகத்தில இருந்த வைத்தியின் காமெடி சிலதை உங்களுக்கு தர்றேன்.

1. மனைவி : பஸ்ஸிற்கு காசு இல்லையப்பா! ஏன்ன செய்வது?

வைத்தி : அப்பிடியென்றால் நல்லது தானே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்களேன்.
(அவர் பஸ்ஸிற்கு காசு இல்லை எண்டவுடனம் பஸ்ஸிற்கு கசநந எண்டு நினைச்சிட்டார்)


வைத்தியென்பவர் ஒரு தேங்காய் வியாபாரியாம். அப்ப நடந்த ஒரு சம்பவம்.

2. தேங்காய் வாங்குபவர் : என்ன சின்னத் தேங்காயாய் இருக்கு உந்தவிலை சொல்லுறீர் ஒரு கறிக்கு கூட போதாது போல இருக்கு

வைத்தி : நீர் என்ன சொல்லுறீர் ஒரு தேங்காயை வைத்து இரண்டு வருடம் கறி காச்சினனான்.

தேங்காய் வாங்குபவர் : அது எப்படி?

வைத்தி : ஒரு பாதியில் மார்கழி முப்பத்தோராம் திகதியும் மறுபாதியில் தை முதலாம் திகதியும் தான்.


3. பஸ் பிரயாணி : நீங்கள் பஸ்ஸில், இருந்து கொண்டு தானே வாறியள். ஊங்களின்ரை காலடியில் இந்த மாங்கன்றை வைக்கலாமே?

வைத்தி : வைக்கிறதென்றால் வையும். ஆனால் தழைக்கிறதும், தழைக்காததும் உம்முடைய காலபலனைப் பொறுத்தது.


4. மாணவி 1 : நான் பரீட்சை நல்லா எழுதினனான் இனி எல்லாம் மேலை இருக்கிறவனுக்குத் தான் தெரியும்.

மாணவி 2 : நானும் அப்படித்தான். இனியெல்லாம் அவன் செயல்.

வைத்தி : அய்யோ! பிள்ளையள் நான் ஆட்டுக்கு குழைவெட்டத்தான் மேலே ஏறினனான். மற்றும் படி எனக்கொன்றும் தெரியாது.
(இவரு மரத்திலை இருந்திருக்கிறார்)


5. மகன் : அப்பா நான் வெளிநரட்டுக்குப் போகப்போறன்.

வைத்தி : நீ எங்கு வேணுமெண்டாலும் போ. ஆனால் பொழுது படுறத்துக்கு முன் வீட்டுக்கு வந்திட வேண்டும்.


6. பெண் : தேங்காய் என்ன விலை? தேங்காய் என்ன விலை? என்னப்பா
உம்மைத்தான் கேட்கிறன்.

வைத்தி : இல்லை. நீர் தேங்காய் என்ன விலை. என்று தேங்காயைத்தானே
கேட்டீர் அது பதில் சொல்லுதோ என்று தான் பார்த்துக் கொண்டிருந்தனான்.


7. ஒருவர் : எனக்கு நாய் வளர்க்க விருப்பமாய் இருக்கிறது. நாயை எங்கே
பிடிக்கலாம்.

வைத்தி : குட்டி நாய் என்றால் எங்கேயும் பிடிக்கலாம். வளர்ந்த நாய் என்றால்
கழுத்திலே தான் பிடிக்க வேண்டும்.


8. ஒருவர் : அந்தக் கொக்கை வளர்க்கலாமா?

வைத்தி : கொக்கின் வளர்த்தி அவ்வளவு தான் அதற்குமேல் அது வளரமாட்டாது.
அதை விட்டுவிட்டு உமது வேலையைபட பாரும்.


சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டேயிருங்க.

உங்கடை முடி சொந்த முடியா இல்ல கடையில வாங்கினதா எண்ணு கேட்டு அடிவாங்கிராதீங்க

இப்பெல்லாம் "ஹெயர் ஸ்டைல்"க்கு மவுசு ஜாஸ்தியாயிட்டே போகுது. அவசரமா வெளியில போக வேண்டிய விசயமா இருந்தாலும் ஒரு "ஹெயர் ஸ்டைல்" போட்டுக்கொண்டு தான் (பெண்கள்) வெளிய போறாங்க. கூடுதலா "ஹெயர் ஸ்டைல்" லால பெண்கள் தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்காங்க. (முடியிருக்கிறவங்க "ஹெயர் ஸ்டைல்" பண்ணிக்கிறாங்க, முடி இல்லாதவங்க கடையில "முடி மயிர்"; வாங்கி; அதுக்கு "ஹெயர் ஸ்டைல்" பண்ணி தலையில மாட்டிக்கிறாங்க ஆனா இதெல்லாம் வெளியில தெரியிறதில்ல)


இதுக்காக ரோட்டில போற வாற பெண்களிடம்; உங்கடை முடி சொந்த முடியா இல்ல கடையில வாங்கினதா எண்ணு கேட்டு அடிவாங்கிராதீங்க. (இப்பெல்லாம் காமெடி அடிக்க முயற்சி பண்ணிறன் ஆனா "வேர்க் அவுட்" ஆகுதில்ல பாருங்க)


சரி விசயத்துக்கு வருவம் இங்க கொஞ்ச பெண்கள் வித்தியாசமா "ஹெயர் ஸ்டைல்" பண்ணியிருக்காங்க பார்த்து ரசியுங்கள். (முக்கிய விசயம் தலைய மட்டும் பாருங்க.) பெரிசா எதிர் பார்க்கிறீங்களோ! சரி பாருங்க…

லைற்றா பார்த்தா காண்டா மிருகம் போல தான் இருக்கு.

இதைப்பார்த்தா என்ன மிருகம் எண்டு தெரியேல்லையேப்பா. யாராச்சும் தெரிஞ்சா "கொமன்டில" அடிச்சுவிடுங்கப்பா.

சத்தியமா இது முள்ளம் பன்றி தான். நான் சொன்னது இந்த "ஹெயர் ஸ்டைல்" தான். இந்தப் பெண்ணையில்லப்பா..
இதைப்பார்த்தா நாய்க்குட்டி மாதிரி இருக்கு.
இது கறுப்பு மான்.

இது யானை கொஞ்சம் மெல்லிசா இருக்கு அவ்வளவு தான்.

இது நிச்சயமா ஆடு தான். (எங்க ஆடல்ல எண்டெல்லாம் கேட்கப்படாது ஆமா..)

தெரியேல்லையேப்பா………

இது பன்றி. வெள்ளப் பன்றி. சீ…சீ கறுப்பு பன்றி.

நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டன் தெரியேல்ல.

ஒரு வேளை "டிஸ்கவரி" சானல்ல வேர்க் பண்ணுறவங்களா இருப்பாங்களோ!

தெரிஞ்ச விசயத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதும் தெரியாத விசயத்தை மற்றவர் தெரியப்படுத்திறதும் தானுங்களே நல்ல நண்பர்களுக்கு அழகு. எனவே எனக்கு தெரிஞ்சத உங்களுக்கு தந்திருக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சத எனக்கு சொல்லுங்க. அதுக்கு ஒரு விதத்தில "கொமன்ஸ்" உதவுது பாருங்க.

ஒபாமாவின் மகளுக்கு நாயின் உரோமங்கள் ஒத்து வராதாம்.

யாரும் தலைப்பை பார்த்து தப்பா முடிவு பண்ணீடாதீங்க.

விசயம் என்னண்டா வெள்ளை மாளிகைக்கு போகப்போகும் ஒபாமா குடும்பத்தினருடன் ஒரு நாயும் போகப்போகுதாம். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்.

ஆனால் இது எந்த நாய் கூடப்போகுது எண்டு இப்ப தான் தெரிவு செஞ்சிருக்காங்க. ஆமாங்க பல நாள் தெரிவின் பின் இந்த நாயை தெரிவு செஞ்சிருக்கிறாங்க.
ன்ன நாயும் லைற்றா சீ…. கறுப்பா இருக்கே அதோட நாயில ஒரு உரோமத்தையும் காணவில்லையே ஒரு வேளை உரோமத்தை உரிச்சிருப்பாங்களோ! எண்டெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்க.

காரணம் என்னண்டால் ஒபாமாவின் மகளுக்கு நாயின் உரோமங்கள் ஒத்து வராதாம். (எந்த மகளுக்கு எண்டெல்லாம் தயவு செய்து கேட்காதீங்க அதை நான் வடிவா கேக்கல்ல… ) அதனால தான் ரோமங்களே இல்லாத இந்த வகையான நாயை தெரிவு செஞ்சிருக்காங்க. (அப்பிடியே என்னை மாதிரி கறுப்பா கலையா இருக்கு.)

அப்புறம் இது பெரு நாட்டில இருந்து வரவழைக்கப்பட்டிருக்குதாம். சரி இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா ஆமா லைற்றா சுட்டிட்டன். சுட்டா என்னங்க நல்ல விசயமா இருந்தா எதையும் சுடுறதில தப்பில்லை எண்டு நினைச்சுக்கொண்டு இந்த விசயத்தை உல்டா பண்ணி போடுறன்.

(ஒரு விசயத்தை சுட்டு போட்டிட்டு அதுக்கு இவ்வளவு பந்தாவா? எண்டு கேக்காதீங்க சுட்டாலும் அதை மனப்புர்வமா ஏற்றுக்கொள்றன் இந்த தங்கமான மனசை பாருங்க. ரொம்ப ஓவரா உளறுறனோ..?)

நானும் இப்பிடி ஒரு தலைப்பபை போட்டு விசயத்தை எழுதி முடிச்ச பிறகு நம்மட வலைத்தள பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கும் போது அவர் சொன்னார் இது என்னமோ இரட்டை அர்த்தத்திலை எழுதியிருக்கு எண்டு பதிவிலிட கொஞ்சம் தயங்கினார். உண்மையில இது இரட்டை அர்த்தத்திலை எழுதப்பட்ட விசயம் ஒன்றும் அல்ல. இப்பிடி ஒரு தலைப்பை போட்டா வாசிக்கிறவங்க கொஞ்சம் எதிர் பார்ப்போடு வாசிப்பாங்க என்பதற்க்கு தான் இப்பிடி தலைப்பு. (சப்பா…… ஒவ்வொரு முறையும் வில்லங்கமா ஒரு தலைப்பை போட்டுட்டு பிறகு அதுக்கு விளக்கம் கொடுக்கவே நான் ஓய்ந்திருவன் போலிருக்கே…)