Friday, May 29, 2009

இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளர்கள் இதை பார்க்க வேண்டாம்

மூளைக்கும் செயலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடப்பது தான் விபத்து. சுருங்கச் சொன்னால் கண நேரத்தில் நடப்பது விபத்து.
விபத்து பல கோணத்தில் வரலாம் (வரையறை இல்லை). ங்க ஒருத்தருக்கு வித்தியாசமான கோணத்தில ஒரு விபத்து.

எனது நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்தது. (கீழே உள்ள படங்கள்) மின்னஞ்சலில் நண்பர் அதிக விளக்கம் தரவில்லை. ஆனாலும் படங்களை பார்க்கும் போதே எப்படி நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

குவைற்றில் கட்டிட வேலையில் இருந்த பொறியியலாளருக்கு இந்த அகோர விபத்து ஏற்பட்டிருக்கிறது.


தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள், இதய நோயாளர்கள் இதை பார்க்க வேண்டாம்.
என்ன பார்க்கிறீங்க. கம்பி முன்னால ஏறி பின்னுக்கு வரைக்கும் போயிருக்கு.

வடிவா தெரியேல்லண்ணா இந்தாங்க குளோசப்பில பின்னுக்கும் பாருங்க.


இடது பக்கம் கம்பி ஏறியிருக்கு.

நீங்க நம்ப மாட்டீங்க எண்டு தெரியும். அதுக்கு தான் இந்த "எக்ஸ்ரே" ரிப்போட்.

மேலும் ஒரு ஆதாரம் 3ம் ,4ம் 5ம் விலா என்புகள் சேதமடைந்திருக்கு.

வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்ட கம்பி.



கொஞ்சம் "குளோசப்" பாருங்க.

சரிகம்பியை வெளியே எடுத்த நிபு.. நிபு… (சீ ரோலிங் ஆகுது.) அந்த கெட்டிக்கார நிபுணரைப் பார்க்க வேண்டாமா? இதோ….


எப்புடி வேலும் கையுமா நிக்கிறார். செய்தது பெரிய சாதனையில்லையாஅதான் இப்பிடி நிக்கிறார்.


சரி. "பேசன்ற்" என்னாச்சு? நலம். நலம். நலம்.
ஆனால் சிதைஞ்சு போன எலும்புகள் பொருந்தினால் ரொம்ப சந்தோசம்.



ஒரு உண்மையை சொல்லட்டுமா?
இதெல்லாம் இப்ப நடந்திச்சு எண்ணு நினைக்கிறீங்களா?
சத்தியமா இது நடந்து இற்றைக்கு நாலு வருசம் ஆகப்போகுது.
லேற் "நியூஸ்" ஆக இருந்தாலும் "லேட்டஸ்ற்" ஆன "நியூஸ்" இல்ல. எப்புடி…….

No comments:

Post a Comment