Friday, May 29, 2009

என் முகம்தனில்…


திருமேனி தரிசனம்
தினம்தறித்த கண்கள்
உன் தொழைதலில்
துவண்டு கிடக்கின்றது
என் முகம்தனில்…

விழியில் பிறந்து
கன்னம் கடந்து
இதழினை கடந்த
உப்புக்கரைசலோடு
எனை கடந்து போனாயோ?

பாதி தூக்கதில்
என்னை கண்விழிக்கச்செய்யும்
கனவாகப் போனாயோ?

என் கவிதைப்
புத்தகங்களின் ஓரங்களை
தின்றுப் போன கரப்பானின்
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?

பறிக்க மறந்த
பூவின் மகரந்ததில்
புதைந்திருக்கின்றாயோ?

ஊஞ்சல் காற்றாய்
என் குழல் சுருள்களில்
உன்னை சூடிக்கொண்டாயோ?

எதுவாக
இருக்கின்றாய் நீ,
நான் மட்டும்
வாழும் இவ்வுலகில்.

No comments:

Post a Comment