Friday, May 29, 2009

சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டேயிருங்க.

நேற்று வாசித்த புத்தகமொன்றில (அடப்பாவி நீ புத்தகம் வேற வாசிப்பியா எண்டெல்லாம் நீங்க என்னை "இன்சல்ற்" பண்ணக்கூடாது. ஏன்னா இப்பல்லாம் வலைத்தளம் எழுத தொடங்கினா பிறகு புதுசா ஏதாவது தேடணும் வித்தியாசமா ஏதாவது பதிவிடணும் எண்டு ரொம்ப முயற்ச்சிக்கிறன். அதிலயும் வலைத்தளம் நல்லா எழுதிறனோ இல்லையோ ஒரு விதத்திலை என்னோட தேடல் ஆற்றல் ரொம்ப அதிகரிச்சிட்டுது.

சரி அப்பிடி என்ன புத்தகம் "கிராமத்தின் சிரிப்பு" என்டொரு புத்தகம் தான் அது. அதில நிறைய வகை வகையான நகைச்சுவைகள் இருந்தன. அதில சில எங்கேயோ கேட்டமாதிரியான நகைச்சுவையாகவும், சில சிரிக்கமுடியாத நகைச்சுவையாகவும் இருந்திச்சு. ஆனால் புத்தகத்தின் கடைசி பகுதியில ரொம்ப வித்தியாசமா "வைத்தியின் நகைச்சுவைகள்" என்றொரு பகுதியிருந்திச்சு அதில வைத்தியென்றொருவர் யாழ்ப்பாணத்தில இருந்தவராம். அவருடைய சாதரண பேச்சிலேயே நகைச்சுவை கலந்திருக்குமாம். அது தவிர அவருடைய சாதாரண பேச்சில "லொஜிக்"கான நகைச்சுவைதான் அதிகமாக இருக்குமாம். அவர் தற்போது இறந்துவிட்டாராம். எனவே நூலாசிரியர் இவருடைய வாழ்க்கையில நடந்த நகைச்சுவை விசயங்களை அவருடைய மனைவியின் உதவியோடு இந்தப்புத்தகத்தில தந்திருக்கிறார்.

சரி விளக்கம் தாரன் எண்டு உங்கட கழுத்தறுக்கேல்ல. அந்தப்புத்தகத்தில இருந்த வைத்தியின் காமெடி சிலதை உங்களுக்கு தர்றேன்.

1. மனைவி : பஸ்ஸிற்கு காசு இல்லையப்பா! ஏன்ன செய்வது?

வைத்தி : அப்பிடியென்றால் நல்லது தானே பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்களேன்.
(அவர் பஸ்ஸிற்கு காசு இல்லை எண்டவுடனம் பஸ்ஸிற்கு கசநந எண்டு நினைச்சிட்டார்)


வைத்தியென்பவர் ஒரு தேங்காய் வியாபாரியாம். அப்ப நடந்த ஒரு சம்பவம்.

2. தேங்காய் வாங்குபவர் : என்ன சின்னத் தேங்காயாய் இருக்கு உந்தவிலை சொல்லுறீர் ஒரு கறிக்கு கூட போதாது போல இருக்கு

வைத்தி : நீர் என்ன சொல்லுறீர் ஒரு தேங்காயை வைத்து இரண்டு வருடம் கறி காச்சினனான்.

தேங்காய் வாங்குபவர் : அது எப்படி?

வைத்தி : ஒரு பாதியில் மார்கழி முப்பத்தோராம் திகதியும் மறுபாதியில் தை முதலாம் திகதியும் தான்.


3. பஸ் பிரயாணி : நீங்கள் பஸ்ஸில், இருந்து கொண்டு தானே வாறியள். ஊங்களின்ரை காலடியில் இந்த மாங்கன்றை வைக்கலாமே?

வைத்தி : வைக்கிறதென்றால் வையும். ஆனால் தழைக்கிறதும், தழைக்காததும் உம்முடைய காலபலனைப் பொறுத்தது.


4. மாணவி 1 : நான் பரீட்சை நல்லா எழுதினனான் இனி எல்லாம் மேலை இருக்கிறவனுக்குத் தான் தெரியும்.

மாணவி 2 : நானும் அப்படித்தான். இனியெல்லாம் அவன் செயல்.

வைத்தி : அய்யோ! பிள்ளையள் நான் ஆட்டுக்கு குழைவெட்டத்தான் மேலே ஏறினனான். மற்றும் படி எனக்கொன்றும் தெரியாது.
(இவரு மரத்திலை இருந்திருக்கிறார்)


5. மகன் : அப்பா நான் வெளிநரட்டுக்குப் போகப்போறன்.

வைத்தி : நீ எங்கு வேணுமெண்டாலும் போ. ஆனால் பொழுது படுறத்துக்கு முன் வீட்டுக்கு வந்திட வேண்டும்.


6. பெண் : தேங்காய் என்ன விலை? தேங்காய் என்ன விலை? என்னப்பா
உம்மைத்தான் கேட்கிறன்.

வைத்தி : இல்லை. நீர் தேங்காய் என்ன விலை. என்று தேங்காயைத்தானே
கேட்டீர் அது பதில் சொல்லுதோ என்று தான் பார்த்துக் கொண்டிருந்தனான்.


7. ஒருவர் : எனக்கு நாய் வளர்க்க விருப்பமாய் இருக்கிறது. நாயை எங்கே
பிடிக்கலாம்.

வைத்தி : குட்டி நாய் என்றால் எங்கேயும் பிடிக்கலாம். வளர்ந்த நாய் என்றால்
கழுத்திலே தான் பிடிக்க வேண்டும்.


8. ஒருவர் : அந்தக் கொக்கை வளர்க்கலாமா?

வைத்தி : கொக்கின் வளர்த்தி அவ்வளவு தான் அதற்குமேல் அது வளரமாட்டாது.
அதை விட்டுவிட்டு உமது வேலையைபட பாரும்.


சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டேயிருங்க.

No comments:

Post a Comment