யாரும் தலைப்பை பார்த்து தப்பா முடிவு பண்ணீடாதீங்க.
விசயம் என்னண்டா வெள்ளை மாளிகைக்கு போகப்போகும் ஒபாமா குடும்பத்தினருடன் ஒரு நாயும் போகப்போகுதாம். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்.
ஆனால் இது எந்த நாய் கூடப்போகுது எண்டு இப்ப தான் தெரிவு செஞ்சிருக்காங்க. ஆமாங்க பல நாள் தெரிவின் பின் இந்த நாயை தெரிவு செஞ்சிருக்கிறாங்க.
காரணம் என்னண்டால் ஒபாமாவின் மகளுக்கு நாயின் உரோமங்கள் ஒத்து வராதாம். (எந்த மகளுக்கு எண்டெல்லாம் தயவு செய்து கேட்காதீங்க அதை நான் வடிவா கேக்கல்ல… ) அதனால தான் ரோமங்களே இல்லாத இந்த வகையான நாயை தெரிவு செஞ்சிருக்காங்க. (அப்பிடியே என்னை மாதிரி கறுப்பா கலையா இருக்கு.)
அப்புறம் இது பெரு நாட்டில இருந்து வரவழைக்கப்பட்டிருக்குதாம். சரி இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா ஆமா லைற்றா சுட்டிட்டன். சுட்டா என்னங்க நல்ல விசயமா இருந்தா எதையும் சுடுறதில தப்பில்லை எண்டு நினைச்சுக்கொண்டு இந்த விசயத்தை உல்டா பண்ணி போடுறன்.
(ஒரு விசயத்தை சுட்டு போட்டிட்டு அதுக்கு இவ்வளவு பந்தாவா? எண்டு கேக்காதீங்க சுட்டாலும் அதை மனப்புர்வமா ஏற்றுக்கொள்றன் இந்த தங்கமான மனசை பாருங்க. ரொம்ப ஓவரா உளறுறனோ..?)
நானும் இப்பிடி ஒரு தலைப்பபை போட்டு விசயத்தை எழுதி முடிச்ச பிறகு நம்மட வலைத்தள பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கும் போது அவர் சொன்னார் இது என்னமோ இரட்டை அர்த்தத்திலை எழுதியிருக்கு எண்டு பதிவிலிட கொஞ்சம் தயங்கினார். உண்மையில இது இரட்டை அர்த்தத்திலை எழுதப்பட்ட விசயம் ஒன்றும் அல்ல. இப்பிடி ஒரு தலைப்பை போட்டா வாசிக்கிறவங்க கொஞ்சம் எதிர் பார்ப்போடு வாசிப்பாங்க என்பதற்க்கு தான் இப்பிடி தலைப்பு. (சப்…பா…… ஒவ்வொரு முறையும் வில்லங்கமா ஒரு தலைப்பை போட்டுட்டு பிறகு அதுக்கு விளக்கம் கொடுக்கவே நான் ஓய்ந்திருவன் போலிருக்கே…)
No comments:
Post a Comment