Friday, May 29, 2009

உனக்கும் சேர்ந்து நானே காதலிக்கிறேன்!

*
நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!

சில்மிஷியே
அருகினில் வா!

*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

"தேவதை ஜாக்கிரதை"

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்

பதறுகின்றது என்
மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..

*
நீ 'ம்' கூட
சொல்லவேண்டாம்

கடைக்கண்ணால்
மட்டும் பார்

உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே

எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
"க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்"

புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது

கோபமாய் வருகின்றது

தேவதையே..

*
நீ
தாமதமாகவே

வருவாய் என்றாலும்

நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை

களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்

முத்தம்.

 *
நீ என்னுடன்
சண்டையிடுவதே

முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்

அது உனக்கும்
தெரியும்

பின் எதுக்கு
சண்டை?

*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ

பத்திரப்படுத்த
வேண்டும்

என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..

*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்

உண்மையும் உண்டு.

*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது

அது உன்னுடன்
மட்டும் எனும்போது..

*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே

உன்னிடமிருந்து
மட்டும்

*

இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை

உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?

*

நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே

என்னை கவலையடையச்செய்கின்றது

"நான் உன்னை காதலிக்கின்றேன்".

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்

உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்

*

உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்

நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்

*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்

நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…

*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்

*
உன்னை கண்டமுதல்

இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு

*
என் கால்களிடம்
கேட்டுப்பார்

உனக்காக காத்திருந்த
தருணங்களில்

என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..

உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன

*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

*

நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு

தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*

உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..

நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்

உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!

*

நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன

உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்

*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…

*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

*
வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்*
உன் நிலம்
மழைப்பொழிய

காத்துக்கிடக்கின்றது
என் வானம்

முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்

*நில்
கவனி
காதலில்
காதலி

*

என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்

என் மனசு.

*
என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை

பெயர்பெற்றது
தென்றலென்று.

*

No comments:

Post a Comment