Friday, May 29, 2009

நெடுந்தொடர்களின் பொது விதிகளா இவை...

 
•கதாநாயகியின் கணவன் அனேகமாக பணக்காரனாக இருப்பார்.

•கதாநாயகியின் கணவனோ அல்லது கதாநாயகிக்கு மிக நெருக்கமான ஒருவரோ இரண்டு மனைவிகளை கொண்டிருப்பார்.

•இடைக்கிடை வேலைக்கு செல்வார். ஆனால் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் இருப்பார். பின்னர் தேவைப்பட்டால் வேலைக்கு செல்வார்.

•நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திற்கு நல்ல 'புரொஜக்ற்' ஒன்றை கதாநாயகி செய்து கொடுப்பதன் மூலம் அந்த நிறுவனம் இலாபத்தில் இயங்கும். ஆனால் அந்த நிறுவனத்தில் ஏதோ காரணத்திற்காக கதாநாயகி தொடர்ந்து வேலை செய்ய மாட்டார்.

•கதாநாயகியின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்வதை எல்லாம் (கதாநாயகி சொல்லும் எல்லா விடயங்களுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும்.) கேட்பதற்கு ஆண்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தான் கதாநாயகியின் பெரும் பலமாக சித்தரிக்கப்படுவர்.

•நிச்சயமாக கணவனை பிரிந்து கொஞ்ச நாட்களாவது கதாநாயகி இருப்பார்.

•எந்த காரணமும் இல்லாமல் கதாநாயகியை எதிர்ப்பதற்கு ஒரு குழு இருக்கும்.

•கதாநாயகி மணமுடித்த வீட்டில் ஒருவராவது கதாநாயகியை காரணமின்றி எதிர்ப்பார்.

•நெடுந்தொடர் முழுவதும் 'பிஸ்னஸ்' செய்தல் என்ற உரையாடல் காணப்படும்.

•ஆரம்பத்தில் தனது எதிரியை மன்னித்து திருந்த வழி விடும் கதாநாயகி பின்னர் விஸ்வரூபம் எடுப்பார்.

•நெஞ்சை உருக்கும் உரையாடல்கள் அடிக்கடி வரும்... அதற்கு பின்ணணி இசையாக ஒப்பாரி போன்ற இசை ஒலிபரப்பாகும்...

•நெடுந்தொடரின் நடுவே கதையானது கதாநாயகியை விட்டு வழுவி வேறொருவரை பிரதானமாக கொண்டு செல்லும்.

•ஆரம்பத்தில் மிக மெதுவாக நகரும் கதையில் ஏராளமான கிளைக்கதைகள் காணப்படும். புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்து சேரும்.

•தொடக்கத்தில் எவ்வளவு மெதுவாக கதை நகர்ந்தாலும் முடிவில் அசுர வேகத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திருந்தி கதாநாயகியோடு நட்பு பாராட்டுவர்.

•கதை முடிவில் கிளைக்கதைகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில கதைகள் தொக்கி நிற்கும். அந்தக் கதையின் முடிவை பார்வையாளர்கள் தாங்களாகவே தீர்மானிக்க கடப்படுவர்.

•தொடரின் முகப்புப் பாடல் இசையை D.இமான் போன்ற வண்ணத்திரை இசையமைப்பாளரே இசையமைப்பர்.

•முகப்புப் பாடலை பா.விஜய் அல்லது கவிப்பேரரசு வைரமுத்து போன்றோர் எழுதுவர். முகப்புப் பாடல் கதைக்கு சம்பந்தமாக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொடரின் பெயர் இடைக்கிடை பாடலின் நடுவே ஒலிக்கும்.

No comments:

Post a Comment