Thursday, June 18, 2009

கையளவு இதயத்துள் உன்னைச்சுமக்கிறேனே நான்..


தென்றலாய் தொட்டாய்

புயலாய் தாக்கினாய்

மறக்க நினைக்கிறேன்

மூச்சுக் காற்றுக்குள்ளும்

சுவாசமாய் நீ....தானே!





தன் உடம்பின்

பாரத்தை விடக்

கூடிய பாரத்தைச்

சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்

உன்னைச்

சுமக்கிறேனே நான்.





மறக்க நினைக்கும்

போதுதானே தெரிகிறது

உன்னை நான்

நேசிப்பதின் ஆழம்.





உறங்க மனமில்லை

நினைவில் நீ...

உறங்கினால்

விழிக்க மனமில்லை

கனவில் நீ!!!

No comments:

Post a Comment