Wednesday, June 3, 2009

நீ என்றாவது என்னை சந்தித்தால் அழுதுவிடாதே.....

crying-girl

கனவுகள் சுமந்து பறந்த பட்டாம்பூச்சி ஒன்று தன் சிறகுகளை இழந்து மெளனமாய் இன்று மனசுக்குள் அழுவது என் செவியில் விழுகிறதே…….. !!! என் உயிரெல்லாம் பூக்கள் மலர கவிதைகள் எழுதிய ஜீவன் இன்று ஜன்னல் வழியே தூரத்து வானின் வெள்ளி நிலவிடம் பேசி மறுமொழி பேச ஆளில்லாமல் தனித்து துடிக்கிறதே….. !! உன் இதயத்தின் விசும்பல்கள் என் இதயம் அறியும்….! என் இதயத்தின் தவிப்புகளை உன் இதயம் அறியும்….! என்றாவது என்னை நீ சந்தித்தால் அழுதுவிடாதே உன் பிரிவை சுமக்கின்ற என் மெல்லிய இதயம் உன் கண்ணீரின் கனம் தாங்காமல் உடைந்துவிடக்கூடும்

2 comments: