Wednesday, June 3, 2009

நவீன காலத்து பழமொழிகள்........

தண்ணியில கப்பல் போனா ஜாலி
கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ
காலி
தூங்கதுக்கு முன்னாடி
தூங்கப் போறேன்னு சொல்ல
முடியும்..ஆனா
முழிக்கிறதுக்கு முன்னாடி
முழிக்கப் போறேன்னு சொல்ல
முடியுமா?
டீ கப்புக்குள்ள டீ
இருக்கும்..ஆனா
வோர்ல்ட் கப்புக்குள்ள
வோர்ல்ட் இருக்குமா?
மண்டையில போடுறது DYE
மண்டைய போட்டா DIE
புள்ளி மான் உடம்பு முழுக்க
புள்ளி இருக்கும்..ஆனா
கண்ணு குட்டி உடம்பு முழுக்க
கண்ணு இருக்குமா?
ஜுர மாத்திரை சாப்பிட்டா
ஜுரம் போயிடுது…
தலைவலி மாத்திரை சாப்பிட்டா
தலைவலி போயிடுது…
பேதி மாத்திரை சாப்பிட்டா
பேதி போயிடுது…
ஆனா…
தூக்க மாத்திரை சாப்பிட்டா
ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
பல் வலின்னு வரவங்களோட பல்ல
டாக்டர் புடுங்கலாம்
ஆனா..கண் வலின்னு வரவங்களோட
கண்ண டாக்டர் புடுங்கலாமா?
கோழி போட்ட முட்டையிலிருந்து
இன்னொரு கோழி வரும்..ஆனா
வாத்தியார் போட்ட
முட்டையிலிருந்து இன்னொரு
வாத்தியார் வருவாரா?
நாம மத்தவங்களுக்கு
உதவத்தான் பிறந்து இருக்கோம்
சரி … அப்ப மத்தவங்க எதுக்குப்
பிறந்து இருக்காங்க?
இரத்த வங்கிக்குப் போனா
இரத்தம் வாங்கலாம்….ஆனா
இந்தியன் வங்கிக்குப் போனா
இந்தியா வாங்க முடியுமா
Cycle ஓட்டினா அது Cyclining
அப்படின்னா…Train ஓட்டினா அது
training-ஆ?

No comments:

Post a Comment