வில்லியம் சேக்சுபியர் (ஏப்ரல் 26, 1564 - ஏப்ரல் 23, 1616 - திகதிகள் ஜூலியான் நாட்காட்டிப்படி) ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிதையாசிரியரும் ஆவார். ஆங்கில இலக்கிய உலகில் ஓர் சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். இவர் 38 நாடங்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் புகழானது இவரின் இறப்பின் பின்னர் அதிகரித்தது.
இவரது பங்களிப்பின் காலத்தை அறுதியிட்டுக் கூறமுடியாதெனினும் அநேகமான ஆக்கங்கள் 1586 இற்கும் 1616 இற்குமிடையிலான காலப் பகுதியிலேயே நிகழ்ந்தது. நகைச்சுவை நாடகங்களையும், துன்பியல் நாடகங்களையும் வழங்கியவர்களில் இவர் மிகச்சிறந்தவராக விளங்கினார்
சேச்சுபியரின் இலக்கிய ஆக்கங்கள் பரவலாக வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாடகங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடித்துக் காட்டப் படுகின்றன.
No comments:
Post a Comment