Tuesday, September 1, 2009

சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை...


சக்திடிவி இன்றைய மக்களின் பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு தொலைகாட்சி மக்களின் நண்பன் போல் அவர்களின் நன்மை தீமைகளை வெளியில் கொண்டுவரும் ஒரு அகிம்சையான ஆயுதம்.ஆனால் இன்று அது மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அவ்வளவு ஏமாற்றுகிறது.
மலையாக மக்களை வைத்து திரு.ரங்கா தன்னை ஒரு மலையாக கதாநாயகன் போல் சித்தரித்து கபடநாடகம் ஆடி வருகிறார்.

மலையகம் தங்களின் தலைநகர்,கோட்டை என்று மார்பு தட்டிக்கொள்ளும் கொள்ளும் வேளை அவர்களின் கஷ்டங்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஒரு தீர்வும் கண்டதாக தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியின் வெற்றி அது எத்தனை வருடமாக செய்கிறோம் என்பதில் இல்லை. அதன் மூலம் மக்கள் எவ்வளவு பயன் பெற்றார்கள் என்பதில்தான் உள்ளது என்பதை திரு.ரங்கா புரிந்து கொள்ள வேண்டும்.
நீக்கள் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. சுனாமி நேரம் மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போது நீங்கள் எமது உறவுகளுக்கு செய்த உதவி மிகப்பெரியது.
மற்றும் பழைய தொகுப்பாளர்கள் முகியம்தான் ஆனால் புதியவர்களின் வருகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இந்தியாவில் இருந்து ஒருவரை கொண்டு வந்து இங்கே நிகழ்ச்சிகளை செய்யவிடும் அளவுக்கு எமது நாட்டில் உள்ளவர்களின் திறமை இன்னும் மங்கவில்லை. தமிழின் முதல்தரம் மகளின் முதல்வன் என்பது என்ன?எஆது தமிழை கொலை செய்யும் அளவுக்கு அவர்களின் பேச்சுவழக்கு உள்ளது.
தவறுவிடுவது மனித இயல்பு அதை திருத்தாமல் இருப்பது மடமை.

தெரிவிப்பது நாங்கள் திருந்துவது நீங்கள்.

1 comment:

  1. மன்னிக்க வேண்டும்

    குற்றம் சுமத்து முன் சக்தி டீவி யாரால் தற்போது இயக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..

    அது இந்தியர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete