
கந்தசாமி பட அனுபவங்களை உங்களோடு பகிரவேண்டும் என்று விரும்புகிறேன்...
உண்மையில் என்னை கந்தசாமி படம் ரசிக்க வைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அண்மையில் சூரியன் வானொலியால் வழங்கப்பட கந்தசாமி பட டிக்கெட் எனது நண்பன் மூலம் கிடைக்கப்பெற்று படம் பார்க்க சென்றோம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை படம் விக்ரமின் நடிப்பால் செதுக்கப்பட்டு இருந்தது.
படத்துக்காக தன் உடல்வாகை மாற்றும் விக்ரம் இப் படத்திலும் மாற்றி இருந்தார்.
ஒரு மாஸ் கதாநாயகன் வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து
இருந்தார். பலர் படம் சரியில்லை என்று சொன்னாலும் என்னை ரசிக்கவைத்தது.
கந்தசாமி படம்பற்றி நான் அறிந்த விடயங்களையும் இங்கே தொகுத்து தருகிறேன்.
கந்தசாமி' திரைப்படம் ஒரே நாளில் ரூ.95 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். கலைப்புலி தானு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில், விக்ரம், ஸ்ரேயா நடித்துள்ள திரைப்படம் "கந்தசாமி'. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் 21ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.
.
சென்னையில் 18 தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த 16ந் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளன்று 1,46,976 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.95,22,498 ரூபாய் வசூலாகியுள்ளது.
இந்த தகவலை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், படத்தின் சென்னை நகருக்கான விற்பனை உரிமையை பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகி யிருப்பது இதுவரை இல்லாத சாதனை என்று அவர் கூறியுள்ளார்.
முன்பதிவு செய்வதற்கு ரசிகர்கள் காட்டி வரும் ஆர்வம் இந்த படம் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்கு சான்றாக விளங்குவதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment