Sunday, September 20, 2009

இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!!!


ஒரு செயலை ஒழுங்கு பட செய்ய விழையும் ஒவ்வொருவரும் அந்த செயல் இனிதே
முடிந்த பொழுது மகிழும் அனுபவம் இந்த ஈகைத்திருநாள். பகல்
முழுவது நோன்பிருந்து மாலையில் நோன்பு முடிப்பதும், 30 நாட்களுக்கு பிறகு
நோன்பு முடிந்த கடைசிநாள் கொண்டாடும் ரம்ஜான் உன்மையில் ஒரு இனிய
அனுபவம்.

மேலும் ஏழைமுத‌ல் ப‌ண‌க்கார‌ர் வ‌ரை வித்தியாச‌மின்றி கொண்டாட‌ப்ப‌டும்
திருநாள் இது, மும்பை மாந‌க‌ரில் காலையில் டீ உட‌ன் சேர்த்து
பாவு(மைதாவில் செய்த‌ ப‌ன்)வையும் சாப்பிட்டு விட்டு வ‌ளையைல் பெட்டியை
எடுத்து கிள‌ம்பும் இஸ்மாயிலும் ச‌ரி , SUN ட்ர‌டெர்ஸ் உரிமையாள‌ர்
ந‌யீம் சேக்கும் ச‌ரி வித்தியாச‌மின்றி உட‌னிருந்து தொழுகை முடித்து
கொண்டாடும் இந்த‌ திருவிழா


மும்பையில் குழ‌ந்தைக‌ளுக்கான‌ பேன்ஸி சாமான்க‌ள் மிக‌க்குறைந்த‌
விலையில் கிடைக்கும் நான் ஒரு 500 ரூபாய்க்கு ஹார்கிளிப், ஸ்கார்ப்,
சின்ன‌ ப‌ர்ஸ் , பேன்ஸி வாட்ச், சிறிய‌ ர‌க‌ விளையாட்டு பொருட்க‌ள்
வாங்கிவைத்துகொண்டு ஈதீ தே பையா ( ப‌ரிசு பொருட்க‌ள் ம‌ற்றும் ப‌ண‌ம்
கொடுப்ப‌தை ஈதி என குழ‌ந்தைக‌ள் சொல்லும்) ஈதீ கொடுங்க‌ அண்ணா என‌ வ‌ரும்
எங்க‌ள் ப‌குதியில் வ‌சிக்கும் அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்கும் கொடுத்து
அவ‌ர்க‌ளின் ம‌கிழ்ச்சி பொங்கும் முக‌த்தை பார்க்கும் போதும் ச‌ரி
அந்த‌ தேவ‌தை போல் உடை அனிந்து சிற‌கின்றி அங்கும் இங்கும் வ‌ல‌ம் வ‌ரும்
குழ‌ந்தைக‌ளை பார்க்க‌ என்றுமே இந்த‌ திருநாளாய் இருக்க‌ கூடாத‌ என‌
எண்ண‌த்தோன்றும்.


இந்த‌ புணித‌ மாத‌த்தில் இறைவ‌னால் அருள‌ப்ப‌ட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டும்
இஸ்லாமிய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளின் புனித‌ நூல் திரும‌றைக்கு மேலும் 15
பெய‌ர்க‌ள் உண்டு அவைக‌ள்


1,அல்கிதாப் = திருவேத‌ம்,
2,அல்ப‌யான் = தெளிவான‌ விள‌க்க‌ம்.
3,அல்புர்ஹான்= உறுதியான‌ அத்தாட்சி.
4,அல்புர்கான் = ந‌ன்மைதீமைக‌ளை பிரித்த‌ற்விப்ப‌து.
5,அத்திக்கு = ஞான‌ம் நிறைந்த‌து, நினைஊட்டுவ‌து,
6,அந்நூர்= பேரொளி
7,அல்ஹ்க்கு = மெய்யான‌து,
8,அல்க‌ரீம் =க‌ண்ணிய‌மான‌து,
9,அல்முபீன் தெளிவான‌து,
10,அல்ஹ‌கீம்= ஞான‌ம் மிக்க‌து,
11,அல்ஹ‌ஜீஸ் =வ‌ல்ல‌மையான‌து,
12,அல்ஹீதா = நேர்வ‌ழிகாட்டி,
13,அல்ர‌ஹ‌ம‌து = அருள்,
14,அஹ்ஷிஃபா= அரும‌ருந்து,
15,அல்ம‌வ்இற‌த்= ந‌ற்போத‌னை


உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும்
நண்பன் புவிராஜ்

1 comment: