Wednesday, September 2, 2009

பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்..


தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தனது மனைவிக்கு பூக்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று துருக்கி நீதிமன்றம் ஒன்று விநோத உத்தரவை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள டியார்பகீர் என்னும் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஹேரெட்டின் செட்டின்டாஸ் என்பவர் தனது இரு மனைவிகளில் ஒருவரையும் அவருடைய 10 வயது மகனையும் அடித்துத் துன்புறுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செட்டின்டாஸ் தனது மனைவிக்கு ஒவ்வொரு வாரமும் பூக்கூடையை தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குக் கொடுத்த வர வேண்டும் என்றும், குழந்தை வளர்ப்பது குறித்து ஐந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட செட்டின்டாஸ் தன்னுடைய மனைவியின் பிறந்த நாளோ அல்லது தங்களது திருமண நாளோ தனக்கு நினைவில் இல்லை என்றும், இதுவரை தான் தன்னுடைய மனைவிக்கு பூக்களைக் கொடுத்ததில்லை என்றும் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நான் வாசித்து சுவைத்த விடயம்

No comments:

Post a Comment