பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Thursday, September 17, 2009
இவரையும் விட்டு வைய்க்காத இலங்கை சிங்கங்கள்...
பிரித்தானிய நடிகர் மிஸ்டர் பீனின் கடன்அட்டையிலும் மோசடி: இலங்கையர் இருவர் கைது
பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடியை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக தெரிவித்தார்.
ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த இருவரையும் கைது செய்திருந்தனர்.
அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தமது நண்பர்கள் மூலமாகவே இவர்கள் இருவரும் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் மலையகப் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள ஸ்தாபனத்திலிருந்தே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment