Sunday, September 27, 2009

மொக்கை பதிவர் கோபி கவனத்திற்கு?எனது நுறாவதுபதிவு

எனது பதிவை வித்தியாசமான முறையில் பதிய நினைத்தேன். ஆனால் அதுக்கு முன் சில பதிவுகள் என்னை ஆழமாக பாதித்தது. அதாவது ஒரு சாதாரண விடயம் அதாவது அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் அந்த படத்தை கொடுத்து வணங்க சொன்னது மட்டும் தான். ஆனால் சில விடயங்கள் மிகைபடுத்தப்பட்டு இருக்கிறது.
முதலில் ஒரு விடயத்தை பலர் பார்வைக்கு விட முன் அதில் இருக்கும் கருத்தின் உண்மை அது எந்தழவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி அறியாமல் மொக்கை பதிவு இடுவது போல் இப் பதிவை இட்டுவிட்டு சென்றுவிடலாம் என பதிவர் கனககோபி நினைத்து விட்டார்.

முதலில் அவரது பதிவை ஆராய்வோம்

(1)// சிலநாட்களுக்கு முன்னர் அவளின் வகுப்பாசிரியை அவளுக்கு அம்மா பகவான் எனப்படுகின்ற ஒருவரின் படத்தை கொடுத்து அவளிடம் வைத்திருக்குமாறு கூறினாராம்//

கனம் கோபி அவர்களே திணிப்பு என்பது என்னவென்று உமக்கு புரியவில்லை என்றுதான் நினைகிறேன். ஆதாவது மத திணிப்புகள் என்பது பல்வேறு விதமாக நடைபெறலாம். திணிப்பு என்பது ஒருவரை வலுக்கட்டாயமாக ஓர் விடயத்திற்குள் தள்ளுவது. பண்டைய காலங்களில் அரசர்கள் நாடுகளை பிடித்தபோது இந்த சமயத்தை தான் கும்பிட வேண்டும் என்று என்று கட்டளை இட்டார்கள் அது மத திணிப்புக்கு ஒரு உதாரணம்.
நீர் குறிப்பிட்ட விடயம் மத திணிப்பு அல்ல என்பதை விளங்கி கொள்ளவேண்டும். அந்த ஆசிரியர் அவரை நீர் பகவனை வணங்ககாமல் விட்டீர் என்றால் தண்டனை தருவேன் என்று கூறினால் அது திணிப்பு.
அதை விட நீர் ஒரு விடயத்தில் நன்மை பெற்றால் அதை உமக்கு தெரிந்தவர்களுக்கு கூறுவது இல்லையா. அது போன்ற விடயத்தை பெரிது படுத்தி சுவாரசியத்திற்காக எழுத நினைப்பது மடமை.

(2)\\ 8வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே\\

கோபி
8வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே என்று நீர் கூறுவது உமது மொக்ககை பதிவை நினைவுகூறுகிறது. அதாவது அவருக்கு ஆசிரியர் பகவனை பற்றி விளக்கம் கொடுக்கவில்லையே?
அந்த குழந்தைக்கு 8 வயது என்று சொல்லியிருந்தீர்.
இவ்வளவு காலத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு இடையில் வந்த சண்டைகள்.சமூக சூழல்கள் ஏற்படுத்தாத தாக்கதைத்யா இது ஏற்படுத்தும்?

(2)\\நீங்கள் சிவபெருமானின் படத்தைக் கொடுத்துவிட்டிருந்தால் வேறுவிடயம். அந்தக் குழந்தை சைவசமயத்தை பின்பற்றுகிறது.\\

நீர் கேள்விப்பட்டு அல்லது பார்த்து இருப்பீர் தானே?
இந்துகள் இந்து முறைப்படி கும்பிடுவது தெரியாத? அல்லது மறைத்து விட்டீரா?

(3) \\காவல்துறையினரால் தேடப்பட பின்னர் இந்த கடவுள் வேடத்துள் நுழைந்தார் என்றும் அறிய முடிந்தது\\

கோபி காவல்துறையால் தேடப்பட்டால் வேறு வேடத்திகுள் புகுந்தால் விட்டு விடுவார்களா நல்ல நகைச்சுவை போம்?
ஒருவர் ஒரு நாளில் பிரபல்யம் அடைய முடியாதுதானே? அவ்வளவு காலம் காவல்துறை கொட்டாவி விட்டதா? பல வருடம் கழித்து பலரை பிடித்த இந்திய பொலிஸாரால் இது முடியாத?

(4)சிலவேளை இந்தத் தகவல்கள் முழுமையாக உண்மையாக இல்லாமல் இருக்கலாம்.

கோபி உமக்கு மொக்கை பதிவு வருகிறது என்றால் அதனுடன் நில்லும் தேவையில்லாமல் ஆதாரம் இல்லாத பதிவுகளை பதிந்து பிரபல்யம் அடைய நினைக்க வேண்டாம்.
கோபி ஒருவரை பற்றி ஆதாரம் இல்லாத விடயத்தை பலர் பார்வைக்கு விடுவது தனிமனித உரிமை மீறல் இல்லையா?
அதற்கு வந்தியதேவன் போன்ற சிலரின் பாராட்டுகள்? ஓர் மூத்த பதிவரால் இதை சுட்டி காட்டி உம்மை திருத்த முடியவில்லையா?

(5) 1990ம் ஆண்டு அல்லது அதற்கு கிட்டிய ஆண்டொன்றில் தனது ஆச்சிரமத்திற்கு வந்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் என்றும் அதன்பின்னரே இப்போது இருக்கும் தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார்.

கோபி அது வேறு விடயம் பெண் சன்நியாசிகளுக்கு தலை முடி
அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டம் உட்பட முறைபாடு செயப்பட்டது.
நீர் குறிப்பிட சம்பவம் நடந்தது ௧௯௯௦ என்று சொன்னீர் அதற்குபிறகு தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் சொன்னீர் அது வரை என்ன நித்திரை கொண்டாரா?

பகவன் தங்ககோயில் திறந்தது 2008 ஏப்ரல் மாதம் ஏன் என்றால் எனது நண்பனும் சென்று இருந்தான்?
இது உமது ஆதாரம் அற்ற அலட்டல் பதிவிற்கு சிறந்த உதாரணம்.

(5) மக்களுக்கு தேவையான பொருட்களை வைத்து பொதிசெய்வது தான் அந்த வேலை.
அந்தப் பொதியில் நிறையப் பொருட்களை வைத்தார்கள்.
ஆனால் அத்தோடு விபூதி உட்பட சில பொருட்களையும், சில சுவாமிப் படங்களையும், சில சுலோகங்களை கொண்ட கடதாசிகளையும் வைத்தார்கள்.

சரி அவர்கள் அவ்வாறு பொதி செய்தது தவறு என்று நீர் கூறுருகின்றீர் தற்பொழுது பலரும் ஏன் நீர் இந்த மக்களுக்காக என்ன செய்தீர் உம்போன்றவர்கள் வாய் மொழியில் வீரர்கள்?

இவ்வளவு தவறான கருத்தை எழுதும் உம் போன்றவர்களால் தேவையில்லாத விடயம் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவும் என்பதை நீர் அறிய மாட்டீரா?


சரியான விடயத்தை நான் மதிப்பவன் உம்போன்றவர்களின் ஆதாரம் அற்ற பதிவை சாடுகிறேன்.

அதை தவிர பதிவர் கோபி எனது நண்பனும் கூட எனக்கும் அவருக்கும் தனிப்பட பகை எதுவும் இல்லை

8 comments:

 1. நண்பருக்கு சில விடயங்களை விளங்கப்படுத்த விரும்புகிறேன்...
  என்னை மொக்கைப் பதிவர் என்று சொல்லுமளவிற்கு உமக்கு எந்தத் தகுதியும் கீடையாது.
  copy & paste செய்யும் பதிவர் என்று நான் உம்மை எப்போதாவது அழைத்தேனா?

  என்னுடைய புகைப்படத்தை என் அனுமதியின்றி பயன்படுத்த உமக்க எந்த உரிமையும் கிடையாது.
  மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளை முதலில் மதிக்கப் பழகும்...

  இனி உமக்கான பதில்கள்...

  //கனம் கோபி அவர்களே திணிப்பு என்பது என்னவென்று உமக்கு புரியவில்லை என்றுதான் நினைகிறேன். ஆதாவது மத திணிப்புகள் என்பது பல்வேறு விதமாக நடைபெறலாம். திணிப்பு என்பது ஒருவரை வலுக்கட்டாயமாக ஓர் விடயத்திற்குள் தள்ளுவது. பண்டைய காலங்களில் அரசர்கள் நாடுகளை பிடித்தபோது இந்த சமயத்தை தான் கும்பிட வேண்டும் என்று என்று கட்டளை இட்டார்கள் அது மத திணிப்புக்கு ஒரு உதாரணம்.
  நீர் குறிப்பிட்ட விடயம் மத திணிப்பு அல்ல என்பதை விளங்கி கொள்ளவேண்டும். அந்த ஆசிரியர் அவரை நீர் பகவனை வணங்ககாமல் விட்டீர் என்றால் தண்டனை தருவேன் என்று கூறினால் அது திணிப்பு.
  அதை விட நீர் ஒரு விடயத்தில் நன்மை பெற்றால் அதை உமக்கு தெரிந்தவர்களுக்கு கூறுவது இல்லையா. அது போன்ற விடயத்தை பெரிது படுத்தி சுவாரசியத்திற்காக எழுத நினைப்பது மடமை. //

  நான் சுவாரசியத்திற்காக எழுதவில்லை என்பதை முதலில்புரிந்து கொள்ளும்...
  hits இற்காக எழுதுபவன் அல்லன் நான்...

  உமக்குத் தான் மதத்திணிப்பு என்றால் என்னவென்று புரியவில்லை.
  8 வயதுக் குழந்தையின் மனதிற்கு நல்லதுது எது, கெட்டது எது எனத் தெரியாது..
  அந்தக் குழந்தையீம் இப்பிடியான ஓர் பழக்கத்தை ஏற்படுத்துவதைத் தான் 'கெளரவமான வடிவில்' மதத்திணிப்பு என்றேன்...

  வேண்டுமானால் எனது தளத்தில் நண்பர் ஒருவர் தெரிவித்ததை வாசியும்...

  //என்ன கொடும சார் கூறியது...

  உங்கள் கருத்து சரியானது.. ஆசிரியையின் முயற்சி மதத்திணிப்பே.. அதுவும் உலகம் புரியாத சிறுகுழந்தையின் மேது என்பதுதான் மகா கொடுமை.. எம்மைப்போல் சகல பலவீனங்களையும் கொண்டவரை கடவுளாக நம்புவதன் லொஜிக் தான் சிரிப்புக்கிடமானது.. கடவுளுக்கு வரைவிலக்கணம் சொல்ல வைக்க வேண்டும்..

  அழகிய வார்ப்புரு.. //

  ReplyDelete
 2. இனி அடுத்தது...

  //கோபி
  8வயதில் நீங்கள் படிப்பிக்கின்ற ஒவ்வொரு விடயமும் அந்தக் குழந்தைகளின் மனதில் வாழ்க்கை முழுவதும் நிற்கப் போகிறதே என்று நீர் கூறுவது உமது மொக்ககை பதிவை நினைவுகூறுகிறது. அதாவது அவருக்கு ஆசிரியர் பகவனை பற்றி விளக்கம் கொடுக்கவில்லையே?
  அந்த குழந்தைக்கு 8 வயது என்று சொல்லியிருந்தீர்.
  இவ்வளவு காலத்தில் அவர்களது பெற்றோர்களுக்கு இடையில் வந்த சண்டைகள்.சமூக சூழல்கள் ஏற்படுத்தாத தாக்கதைத்யா இது ஏற்படுத்தும்?//

  அப்போது எட்டு வயதக் குழந்தையிடம் ஆபாசப் படமொன்றை கொடுத்தால் அது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்காதா?
  8 வயதில் நடப்பவை வாழ்க்கை முழுதும் பாதிக்காது என்றால் பாடசாலைகளில் ஆபாசப் படங்களை கொடுக்கலாமே?
  பெற்றோர்களுக்கு அடையில் ஏற்படும் சண்டைகளைப் பற்றிகூறியிருந்தீர்...
  பெற்றோர்கள் பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு முன்னால் வைத்து சண்டை பிடிப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்... உமக்கு விளக்கம் குறைவாயிருப்பதை எண்ணி வருந்துகிறேன்...
  எனது மொக்கைப்பதிவை எவ்வாறு நினைவுகூறுகிறது என்பதை சொன்னால் விளக்கம் தர தயாராக இருக்கிறேன்...


  //நீர் கேள்விப்பட்டு அல்லது பார்த்து இருப்பீர் தானே?
  இந்துகள் இந்து முறைப்படி கும்பிடுவது தெரியாத? அல்லது மறைத்து விட்டீரா? //

  இந்துமுறைப்படி (உண்மையில் சைவம் என்பது தான் சரி... உமது பாதையிலேயே வருகிறேன்...) என்ன கும்பிட்டீர்கள்?சைவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் தானே? உங்கள் எத்தனை பேரின் வீடுகளில் சிவபெருமானின் படம் இருக்கிறது அல்லது பெரிதாக இருக்கிறது?
  திரு.திருமதி விஜயகுமாரின் படங்களைத் தானே வீட்டின் முற்புறமாக பெரிதாக வைத்திருக்கிறீர்கள்...?


  //கோபி காவல்துறையால் தேடப்பட்டால் வேறு வேடத்திகுள் புகுந்தால் விட்டு விடுவார்களா நல்ல நகைச்சுவை போம்?
  ஒருவர் ஒரு நாளில் பிரபல்யம் அடைய முடியாதுதானே? அவ்வளவு காலம் காவல்துறை கொட்டாவி விட்டதா? பல வருடம் கழித்து பலரை பிடித்த இந்திய பொலிஸாரால் இது முடியாத? //

  உமக்கு விளக்கம் போதாது என்பதை மறுபடியும் நிரூபிக்கிறீர்...
  கடவுள் வேடத்தில் நுழைந்தால் கைதுசெய்ய மஷமுடியாது என்றில்லை.
  ஆனால் அடித்தட்டு மக்கள், படிப்பறிவில்லாத மக்கள் கடவுள் என்று ஏற்றுக் கொண்ட ஒருவரை கைதுசெய்வது இலகுவானதல்ல... அதுவும் இந்தியாவில்... ஹா ஹா...
  நீர் முதலில் ஒரு விடயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் பாரும்...

  ReplyDelete
 3. //கோபி உமக்கு மொக்கை பதிவு வருகிறது என்றால் அதனுடன் நில்லும் தேவையில்லாமல் ஆதாரம் இல்லாத பதிவுகளை பதிந்து பிரபல்யம் அடைய நினைக்க வேண்டாம்.
  கோபி ஒருவரை பற்றி ஆதாரம் இல்லாத விடயத்தை பலர் பார்வைக்கு விடுவது தனிமனித உரிமை மீறல் இல்லையா?
  அதற்கு வந்தியதேவன் போன்ற சிலரின் பாராட்டுகள்? ஓர் மூத்த பதிவரால் இதை சுட்டி காட்டி உம்மை திருத்த முடியவில்லையா? //

  யார் பிரபல்யம் தேடுவது?
  ஏன் உமது தலைப்பாக 'மொக்கைப் பதிவர் கனககோபியின் கவனத்திற்கு' என்று போட்டீர்?
  வித்தியாசமாக தலைப்புக்களை இட்டு பிரபல்யம் அடைய நினைப்பது யார்?
  நான் பிரபல்யம் தேடுவதாக இருந்திருந்தால் 'அம்மா பகவான் என்ற நடிகன்' என்று இட்டிருக்கலாம்...
  எனக்கு மொக்கைப் பதிவு வருகிறதோ அல்லது நல்ல பதிவுகள் வருகிறதோ என்பது உமக்குத் தேவையில்லாத விடயம்.
  என்னுடைய தனிப்பட்ட வலைத்தளத்தில் நான் விரும்புவதை நான் எழுதுவேன்...
  நான் ஆதாரம் இல்லாதவை என்று சொன்னவை பிழையானவை என்று அர்த்தமல்ல...
  ஆதாரம் இல்லாமல் ஒருவர் செயற்பட்டால் அவர் சரியானவர் என்று அர்த்தப்படாது.
  நான் அம்மா பகவானை விமர்சித்து அந்தப் பதிவை எழுதவில்லை. அம்மா பகவான் பிழையானவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் நான் அதை என் பதிவில் சொல்லவில்லை. சொல்லவரவில்லை.
  இப்படியான சர்ச்சைகள் நிலவுகின்ற ஒருவரின்படத்தை, முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒருவரின் கொள்கைகளை பரப்ப நினைப்பதை தான் பிழை என்றேன்...
  எனது தனிப்பட்ட கருத்தை ஆதரிப்பது வந்தி அண்ணாவிற்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இருக்கிற உரீமை.
  அதே போல் அதை எதிர்ப்பது உம் உரிமை.
  உமக்கு எதிர்க்க உரிமை இருக்கிறது என்னால் அவருக்கு ஆதரிக்க உரிமை இருக்கிறது...
  உமக்கு விளக்கம் போதாது என்பதை மீண்டும் நிருபித்துவிடடீர்.


  //கோபி அது வேறு விடயம் பெண் சன்நியாசிகளுக்கு தலை முடி
  அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டம் உட்பட முறைபாடு செயப்பட்டது.
  நீர் குறிப்பிட சம்பவம் நடந்தது ௧௯௯௦ என்று சொன்னீர் அதற்குபிறகு தங்கக் கோயிலினுள் (Golden temple) நுழைந்தார் என்றும் சொன்னீர் அது வரை என்ன நித்திரை கொண்டாரா? //

  நீர் சொல்வதற்க ஆதாரம் உண்டா? நடுசீலையான ஆதாரங்கள்? உங்கள் தங்கக் கோயிலின் பக்கச் சார்பான ஆதாரங்கள் வேண்டாம்.
  அந்தச் சம்பவத்தின் பின்னர் உடனடியாக தங்கக் கோயிலினுள் நுழைந்தார் என்று சொன்னேனா?
  அதுசரி,
  கடவுளின் ஆதாரம் என்கிறீர்கள், எனக்குத் தெரிந்தரை கடவுளின் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவர்கள் எளிமையானவர்களாமே?
  கடவுளுக்கு அன்பு தானே வேண்டும்?
  ஒருவரைப் பார்க்க பணம் கட்டிச் செல்வது வேறொரு இடத்துக்குத் தான். அங்கு தான் அறைக்குள் போவதற்கு பணம். மணிக்கு இவ்வளவு என்று அறவிடுவார்கள் என தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன்...

  //சரி அவர்கள் அவ்வாறு பொதி செய்தது தவறு என்று நீர் கூறுருகின்றீர் தற்பொழுது பலரும் ஏன் நீர் இந்த மக்களுக்காக என்ன செய்தீர் உம்போன்றவர்கள் வாய் மொழியில் வீரர்கள்? //

  நான் இரண்டு நாட்கள் அங்கு சென்றேன். வெள்ளவத்தையில் தானே நடந்தது? நீர் எங்கே குப்பை கொட்டப் போனீர்?
  வீட்டில் விஷேஷம் இருந்தும் வருகிறேன் எனச் சொன்னதற்காக வீட்டு விஷேஷத்தையும் தவறவிட்டு நான் சென்றேன்.
  ஒரு கிறிஸ்்தவ நிறுவனமொன்று உதவிப் பொருட்களோடு யேசுநாததரின் படத்தையும் பைபிளையும் கொடுத்திருந்தால் நீங்கள் எல்லாம் சும்மா இருப்பீர்களா?
  உங்கள் சமயம் என்பதால் பாரபட்சம் காட்டுகிறீர்கள்... சுயநலவாத மதவாதிகள் நீங்கள்...


  //இவ்வளவு தவறான கருத்தை எழுதும் உம் போன்றவர்களால் தேவையில்லாத விடயம் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவும் என்பதை நீர் அறிய மாட்டீரா? //

  உமது பாணியில் கதைத்தால் நானென்ன அவர்களை நான் சொல்வதை கேட்கவா சொன்னேன்?
  நான் அவர்களை நான் சொன்னபடி நடக்காவிட்டால் உங்களுக்கு அடிபப்பேன் என அச்சுறுத்தினால் தான் பிழை... நான் சொல்லவில்லை... உமது பாணியில்... அதாவது ஆசிரியை படத்தை கொடுத்தால் பிழையில்லை, கட்டாயம் கும்பிட வேண்டும் என்று சொன்னால் தான் பிழை என்றீரே? ஹா ஹா ஹா...

  நான் எனது கருத்தைத் தான் சொன்னேன்... வாசிப்பவர்கள் வளர்ந்தவர்கள்... சரியெது பிழையெத என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்... ஆடு நனையித என்று ஓநாய் கவலைப்படத் தேவையில்லை...

  //சரியான விடயத்தை நான் மதிப்பவன் உம்போன்றவர்களின் ஆதாரம் அற்ற பதிவை சாடுகிறேன். //

  அப்படியா?
  சாயிபாபாவின் மந்திரவிளையாட்டுக்கள் அடங்கிய ஏராளளமான வீடியோக்கள் youtube இல் இருக்கின்றனவே?
  பிறகேன் அவரின் படமும் உங்கள் வீட்டில் இருக்கிறது?
  நீர்தான் சரியான விடயத்தை மதிப்பவர் என்றீரே? அது தான் கேட்டேன்...

  ReplyDelete
 4. கேலம்பிடன்யா கெளம்பிட்டான்

  ReplyDelete
 5. //ஆகீல் முசம்மில் said...
  கேலம்பிடன்யா கெளம்பிட்டான் //

  ஏனய்யா...
  எங்கயெல்லாம் குழப்பம் இருக்கோ அங்கயெல்லாம் வந்து நிக்கிறியே?
  வடிவேல் சொல்ற 'வந்துட்டான்யா வைபிறேசனு' என்பது தான் ஞாபகம் வருகிறது...

  ReplyDelete
 6. முதலில் கோபியின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் அதன்பின் நான் உங்களிடம் இந்த இடத்தில் சில கேள்விகள் கேட்கிறேன்.


  எனது பதிவிலும் மனிதக் கடவுளர்கள் தொடர்பாக சில கேள்விகள் கேட்டிருகிறேன். முடிந்தால் பதில் தாருங்கள்.

  http://shanthru.blogspot.com/2009/09/blog-post_28.html#

  ReplyDelete
 7. இந்த பதிவு தான் மொக்கையா இருக்கு!

  இலங்கையில் கூட கொம்மா பகவானுக்கு சொம்பு தூக்குறாங்களா!?

  அந்த கொம்மா பகவான் போர் நடந்த போது ஏன் அப்பாவி மக்களை காப்பார்றவில்லையாம்!

  ReplyDelete
 8. இந்த பதிவு தான் மொக்கையா இருக்கு!

  முதலில் கோபியின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்?
  மறுபடி மொக்கை பதில் வேண்டாம் ...... பாமர மக்களுக்கு நீங்கள் புரிய வைக்கணும், உங்களுக்கே புரியவில்லை என்றால் ?.... thanks kobi

  ReplyDelete