Wednesday, September 30, 2009

நாம் கடந்து சென்ற வீதிகளில் விலைமாது ராட்சியம்?


நாம் அறியா பக்கங்கள்?
பகலில் வர்தகநகரமாகவும் இரவில் வறியவர்கள்,விலைமாதுகளின் புகலிடமாகும் விளங்கும் பெற்றா என்று அழைக்கப்படும் புறக்கோட்டை.
என்னை அதிரவைத்த உன்னை சம்பவம்.
உங்களை பார்வைக்கு.
தொடர் வாதங்களுக்கு பிறகு சொந்த பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

நாம் பகலில் நடந்து சென்ற இடங்களா என்று வியக்கும் அளவுக்கு அவை வறியவர்களின் வதிவிடங்களாகவும் விலைமாதுகளின் படுக்கை அறைகளாக மாறியிருப்பது அதிரவைத்தது.

பகலில் மக்கள் அலைவெள்ளத்தால் நிரம்பியிருகும் புறக்கோட்டை வீதி கடைகள் இரவில் விலைமாதுகள் பரிமாறும் இடமாக காணப்படுகிறதே?
எமது நாடு எவ்வளவு ஆபாச வலைதளங்களை தடை செய்தாலும் சுதந்திரமாக நடக்கும் இதுபோன்ற தவறுகளை தடுக்க என்ன வழிசெய்யப்போகிறது?
காமம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்றுதான்.
ஆனால் இதுபோன்ற தவறான காமம் தண்டிக்கப்பட வேண்டியதே?
உலகில் உள்ள சில நாடுகள் சட்ட ரீதிதியாக பாலியல்தொழிலை நடத்த அனுமதி வழங்கிஉள்ளன.ஆனால் எமது நாட்டில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஒரு விடயத்தை நாம் பார்க்கும் போது,அனுமதி வழங்கப்பட்ட நாடுகளுன் ஒப்பிடும் போது எமது நாட்டில் கற்பழிப்பு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.
இதற்கு தகுந்த தீர்வு காண்பது அரசாங்கத்தின் கைகளில்தான்?
வறியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் செல்லுகிறது.
அதிலும் சிறுவர்கள் தொகை அதிகம்.
காலத்தின் கைகளில் இதைவிட்டு விடை பெறுகிறேன். ஒவ்வெரு வாரத்திலும் எமது சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்களை எழுத தீர்மானித்து உள்ளேன்.

எனது அடுத்த பதிப்பாக லண்டன் வரை சென்ற நண்டுக்கறி
சுவாரசியம் மிகுந்த உண்மை சம்பவம்?


No comments:

Post a Comment