பதிவு பதிய வருகிறேன் புதிது புதிதா தருகிறேன் வாருங்கள் வந்து பாருங்கள் தமிழ் தரணியை ஆழும் என்று நம்புங்கள்....
Friday, September 4, 2009
ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ராஜ போதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குட்டிப்பாம்பை நாக்கின் மீது கடிக்க விட்டால் விஷம் உச்சந் தலைக்கு எகிறி மூச்சை அடைக்கும். இதயத்துடிப்பு, மூச்சை எல்லாம் இழந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு இறந்துவிடுவார்கள். குட்டித் தூக்கம் மாதிரி, இரண்டு நிமிடங்கள் மட்டுமே இறந்து போகும் குட்டி இறப்பு. பின்னர் அதிர்ஷ்டம் இருந்து எழுந்தால் இரண்டு நாளைக்கு ஆல்ஹகால் வாடை இல்லாமல் போதையில் மிதக்கலாம். இந்த போதையைத்தான் ராஜ போதை என்கிறார்கள்.
இப்படிச் சொல்கிறார்களே தவிர்த்து பாம்பு விஷத்தை போதைக்காகப்பயன்படுத்துவது குறித்தானஅதிகாரபூர்வதகவல்கள் மருத்துவப் பதிவுகளில் தேடிய வரையில் எதுவும் இல்லை. என்றாலும் கஞ்சா, ஹெராயின் போன்ற சில போதைப் பொருட்களை உட்கொண்டவர்கள் போதையின் அளவு போதவில்லையென்றும், மேலும் போதை வேண்டும் என்பதற்காகவும் பாம்புக் கடிக்குச் செல்கிறார்கள் என்பதான தகவல்களுக்கு ஆதாரம் உண்டு.
பெரும்பாலும் பணக்கார பார்ட்டிகளில் கும்மாளத்திற்கு மெருகூட்ட பாம்பாட்டிகளைக் கூட்டி வருகிறார்கள். குறிப்பிட்ட வகை பாம்புகள், அதுவும் குறிப்பிட்ட வயதிற்குள்ளான குட்டிப் பாம்புகளையே கடிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜ நாகத்தில் இருக்கும் விஷம் Neuro Toxic. சற்று வயதான பாம்புகளில் இந்த விஷத்தின் வீரியம் அதிகமாக இருக்கும். இத்தகைய விஷம் அதிகமுள்ள பாம்பைத் தேர்ந்தெடுத்தால் விஷம் மூச்சிழப்பிற்கு அடிகோலி, உடலின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும்.
சிலவகைப் பாம்புகளில் இருக்கும் விஷம் ஹீமோஸ்டாட்டிக் விஷம். இந்த வகை விஷம் உடனடியாக இரத்தத்தைக் கட்டியாக்கி உயிரை முடித்துவிடும். இந்தமாதிரியானகாரணங்களால் பாம்பினைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்தகவனம் தேவை. இந்தியாவில் பெரும்பாலும் குட்டி நாகபாம்புகளையும், மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்புகளையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் பாம்புக்கடி என்பது நீண்டகாலமாகஇருந்து வருகிறது. சிலஇந்து சாதுக்கள் மதரீதியானகாரணங்களுக்காகநாகப்பாம்பினைத் தங்கள் நாக்குகளில் கொத்தச் செய்கிறார்கள். மும்பையின் தென் பகுதிகளில் மிகப் பரவலாக போதைக்குப் பாம்புக்கடியைப் பயன்படுத்துவது உண்டு. ஒரு கடிக்கு ஐம்பது ரூபாய் என்றஅளவில் கிடைக்கிறது. சென்னையிலும் உண்டு என்று சென்றவாரங்களில் ஒரு வாரஇதழின் கட்டுரையில் இருந்தது. ஒரு கடிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாம்.
விசாரித்துப் பார்த்ததில் சென்னையிலும் நூறு ரூபாய் அளவில் பாம்புக் கடி இருக்கிறது. ராயப்பன் என்ற வட சென்னை வாழ் மனிதர் எழுபதுகளின் மத்தியிலிருந்து (தனது 20 வயதில்) இன்று வரை பாம்புக் கடியின் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். கஞ்சா அடிக்கஆரம்பித்தவர், போதை இன்னமும் அதிகம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதற்காகபாம்புக் கடியையும் கூடச் சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் 18 மணி முதல் 20 மணி நேரம் மயக்கத்தில் இருந்திருக்கிறார். நாட்கள் ஆக ஆக12 மணி முதல் 14 மணி நேரமாகபோதை நேரம் குறைந்திருக்கிறது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்று சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதுவரையிலும் பாம்புக் கடிக்குப் பழகியவர்கள் அதற்கு அடிமை ஆனதற்கானதகவல்கள் பதிவு செய்யப்படவில்லை. உதாரணமாகஹெராயினைத் தொடர்ந்து உட்கொள்பவரை திடீரெனநிறுத்தச் செய்தால் அதன் விளைவு கொடூரமானதாகஇருக்கும். இதற்கு Withdrawal Symptoms என்று பெயர். ஹெராயின் கிடைக்காதஅந்தநேரத்தில் கிட்டத்தட்டபைத்தியநிலையை அடைவர். தொடர்ச்சியானபதற்றம், வியர்வை, போதைக்காக வேண்டி பின் விளைவுகள் குறித்து யோசிக்காமல் எதையும் செய்தல் போன்றவை சில. தமிழ்/தெலுங்கு படங்களில் போதைக்கு அடிமையான பெண்கள் போதை வேண்டும் என்பதற்காக எதுவும் செய்வர் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்குமே, அப்படி. இது போன்றWithdrawal Symptoms பாம்புக்கடிக்கு இல்லை.
பாம்புக்கடிக்குப் பழகியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் இதனை "அடிமையாக்கும் போதை" என்று சொல்லமுடியாது. நேரம் கெட்டுக் கிடந்தால் "ஆளை முடிக்கும் போதை" என்று வேண்டுமானால் சொல்லலாம்.
Withdrawal Symptoms தொடர்பான வீடியோ.
நான் நேற்று ஒரு படம்(வால்மீகி) பார்த்தேன். அதில் பட நாயகன் பாம்பு மூலம் போதை பெறுவான்.
இதை பார்த்து வியந்த நான் எனது கணனியில் தேடி பெற்ற விடயம்தான் இது.
மேலதிக தகவலுக்காக இது சம்மந்தப் பட்ட வீடியோ படங்களையும் தேடி இதில் இணைத்து உள்ளேன்.
சற்று புதினமாகத்தான் இருக்கின்றது..
அற்ப சுகத்துக்கு இவ்வளவு ரிஸ்கு எடுப்பதா?
சின்ன புள்ள தனமா இல்ல..
Subscribe to:
Post Comments (Atom)
போதையைப் பற்றி எல்லாம் எழுதுறீங்க... பிரமாதம்...
ReplyDeleteஉங்களின் ஆதரவு எமக்கு தேவை. வருகைக்கு நன்றி.
ReplyDeletehttp://tamilhq.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ReplyDelete