
மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென நைஜீரியாவைச் சேர்ந்த 84 வயது முதியவரொருவருக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேற்படி நபர் மனைவிகளின் எண்ணிக்கையை நான்காக குறைக்காவிட்டால், மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை 86. நைஜீரியாவில் முஸ்லிம் அரசு பதவி வகிக்கிறது. இங்கு முஸ்லிம் ஆண்கள், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஷரியத் சட்டப்படி, நான்குக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆனால், நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான நைஜெர்ரில் வசிக்கும் முகமது பெல்லோ அபுபக்கர் என்ற முன்னாள் ஆசிரியர், இது வரை 86 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு பிறந்த குழந்தைகள் 170. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது, இத்தகவலை வெளியிட்டார் அபுபக்கர். நான்கிற்கு மேற்பட்ட மனைவிகளுடன் வசிப்பது குற்றம் என்று குர் ஆனில் கூறவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியானதையடுத்து நடவடிக்கையில் இறங்கினர் அதிகாரிகள். இவ்வழக்கை விசாரித்த நைஜீரிய இஸ்லாமிய விவகார உயர் நீதிமன்றம் அபுபக்கரின் பேச்சை கடுமையாக கண்டித்தது. மனைவிகளின் எண்ணிக்கையை குறைக்காவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று, அபுபக்கரை எச்சரித்துள்ளது.
நல்ல தேடல் நண்பா...
ReplyDelete