Wednesday, September 2, 2009

நினைத்தாலே இன்பம் தரும் வாசகங்கள்...

(1) கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது: அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது. எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.


(2)உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

(3)தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
(4)ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்

(5)வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் உலகம் ஏசும் வீழ்ந்தவன் வாழ்துவிட்டால் உலகம் பேசும் இதுவே உலக நியதி !!!!!!!

(6)நான் உயிர் வாழ வேண்டும்´ என்ற உறுதி மிக்க ஆசைதான் வாழ்க்கையாகிறது...

(7)மனிதனுடைய இதயக் குமறலே, அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

(8)சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் - ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது

(9)கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது

(10)முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது

(11)நண்பன் யாரென தெரிந்து கொள் அவன் நல்லவனாயினும் விலகி நில்! அறிவால் ஒருவனை அளந்து கொள்-அல்லது அனுபவித்தாவது புரிந்து கொள்.

2 comments:

  1. super வாசகங்கள்..

    ReplyDelete
  2. very nice
    http://cybergangdevelopers.info
    http://www.izonedevelopers.com

    ReplyDelete